இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராக்கி பாய் யாஷிற்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கன்னட சினிமா என்றாலே பிறமொழிகளில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்யும் திரையுலகமாகவே பார்க்கப்பட்டு வந்தது. அதனை தகர்த்தெரிந்து கன்னட படங்களை பிற மொழி ரசிகர்கள் விரும்பி பார்க்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளது கன்னட திரையுலகம். இந்த மாற்றத்திற்கு வித்திட்ட படம் என்றால் அது கே.ஜி.எஃப் தான்.
24
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் இந்தியா முழுவதிலும் அனைத்து மொழிகளிலும் கொண்டாடப்பட்டது. இதனால் அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, அதன் அடுத்த பாகமும் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. சொன்னபடி 3 ஆண்டுகளில் கே.ஜி.எஃப் 3-ம் பாகம் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது.
34
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் தான் கடந்த வெளியான இந்திய படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாகும். இப்படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருந்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ராக்கி பாய் யாஷ் தான். அவரின் நடிப்பு நார்த் முதல் சவுத் வரை அனைத்து மாநில ரசிகர்களையும் கவர்ந்தது.
கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராக்கி பாய் யாஷிற்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், அப்படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “கே.ஜி.எஃப் 2 அற்புதமான ஒன்றாகும், விரைவில் மற்றொரு மான்ஸ்டரும் காத்திருக்கிறது. கனவு கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து, அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற எங்கள் ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையட்டும்” என குறிப்பிட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.