விபத்துக்கு பின்... மீண்டும் புது கார் வாங்கிய யாஷிகா ஆனந்த் - அதன் விலை எவ்வளவு தெரியுமா?

Published : Jan 08, 2023, 11:31 AM IST

நடிகை யாஷிகா ஆனந்த் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

PREV
14
விபத்துக்கு பின்... மீண்டும் புது கார் வாங்கிய யாஷிகா ஆனந்த் - அதன் விலை எவ்வளவு தெரியுமா?

ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் அவர் நடித்திருந்தாலும், அவரை பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.

24

இந்நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வந்தன. இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வந்த யாஷிகா, கடந்த 2021-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார். தன் தோழியுடன் பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும்போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பாவ்னி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்... துணிவு படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய தடை விதிப்பு... அந்த ஒரு காட்சியால் அஜித் படத்துக்கு வந்த சிக்கல்

34

விபத்துக்கு பின் பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா, பின்னர் படிப்படியாக அதிலிருந்து குணமடைந்து தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலையில், தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் புது கார் ஒன்றை வாங்கி உள்ளார். விபத்துக்கு பின் அவர் வாங்கியுள்ள முதல் கார் இதுவாகும்.

44

தற்போது புத்தாண்டு ஸ்பெஷலாக Volkswagen Virtus மாடல் காரை யாஷிகா வாங்கி இருக்கிறார். டாப் எண்ட் மாடல் காரான இதன் விலை ரூ.22 லட்சத்துக்கு மேல் இருக்குமாம். விபத்தில் இருந்து மீண்டு வந்த பின் புது கார் வாங்கியுள்ள யாஷிகாவுக்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்து வருகிறது. மறுபக்கம் கவனமாக ஓட்டுமாறு அறிவுரைகளும் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... செம்ம கியூட்.. மனைவி சாயிஷா மற்றும் மகளுடன் நடிகர் ஆர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் படு வைரல்!

click me!

Recommended Stories