எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள மூன்றாவது திரைப்படம் துணிவு. இப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், சமுத்திரக்கனி, அமீர், பாவனி, சிபி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.