சற்று முன்... பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாரா யாரும் எதிர்பாராத பிரபலம்? ரசிகர்கள் ஷாக்..!

Published : Jan 07, 2023, 11:43 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யாரும் சற்றும் எதிர்பாராத போட்டியாளர் வெளியேறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

PREV
15
சற்று முன்... பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாரா யாரும் எதிர்பாராத பிரபலம்? ரசிகர்கள் ஷாக்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த கிட்ட தட்ட 80 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி நாட்களை நெருங்கி வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் விக்ரமன், ஏடிகே, கதிரவன், மைனா, ரச்சிதா, ஷிவின், அமுதவாணன் மட்டுமே உள்ளனர். 
 

25

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சைலண்டாக இருந்த போட்டியாளர்கள் கூட... மிகவும் பரபரப்பான தன்னுடைய விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த ஆரம்பத்தில் சைலெண்டாக விளையாடி வந்த ரக்ஷிதா  இப்போது தான் கொஞ்சம் தன்னை வெளிக்காட்ட தொடங்கினார். 

பாரம்பரிய படுகா இன உடையில் நடிகை சாய் பல்லவி! குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது!
 

35

கடந்த வாரம் அசீமுக்கு எதிராக அவர் ஆற்றிய உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற போட்டியாளர்களில் ரச்சிதா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில் இந்த வாரம் ரக்ஷிதா வெளியேறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 

45

ரக்ஷிதாவை பொறுத்தவரை... அசீம், தனலட்சுமி போல் சண்டை போட்டு, மற்ற போட்டியாளர்களை தொந்தரவு செய்து கன்டென்ட் கொடுக்காமல், எந்த போட்டியாளருடனும் முட்டல், மோதல் இல்லாமல் அடுத்தவர்களை தொந்தரவு செய்யாமல், போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் என கூறலாம். 

செம்ம கியூட்.. மனைவி சாயிஷா மற்றும் மகளுடன் நடிகர் ஆர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் படு வைரல்!
 

55

பிக்பாஸ் டைட்டில் வாங்கும் போட்டியாளர்கள் பட்டியலில் ரச்சிதா பெயரும் இடம்பெற்ற நிலையில், இவர் திடீர் என வெளியேறியதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் ஆர்மியை சேர்ந்தவர்களை கவலையடைய செய்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories