செம்ம கியூட்.. மனைவி சாயிஷா மற்றும் மகளுடன் நடிகர் ஆர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் படு வைரல்!

First Published | Jan 7, 2023, 8:39 PM IST

நடிகர் ஆர்யா  அவருடைய மனைவி சாயிஷா மற்றும் மகள் ஆரியானாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

நடிகர் ஆர்யா பிறந்த நாளை முன்னிட்டு ஏற்கனவே சாயிஷா முதல் முறையாக தன்னுடைய மகள் ஆரியானா புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், தற்போது இன்னும் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்ற 'வனமகன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமான நடிகை சாயிஷாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.

'இருள் ஆளப்போகிறது' அருள்நிதி - பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் 'டிமான்டி காலனி' படத்தின் முதல் பார்வை வெளியானது

Tap to resize

ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும், 'கஜினிகாந்த்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே உருவான நட்பு பின்னர் காதலாக மாறியது.

இவர்களின் காதல் குறித்து கிசுகிசு எழுந்த போது இருவருமே இது குறித்து வாய் திறக்காத நிலையில்,  சாயிஷாவின் வீட்டில் முதலில் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

தங்க நிற பட்டு புடவையில் தகதகவென ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின்..! ரசிகர்கள் உள்ளதை கொள்ளை கொண்ட கியூட் போட்டோஸ்!

பின்னர் ஒருவழியாக இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்த பின்னர், இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக ஹைதராபாத்தில் இவர்கள் திருமணம் நடந்தது. 

திருமணத்திற்கு பின்னர் சாயிஷா ஆர்யாவுடன் சேர்ந்து 'டெடி' மற்றும் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிப்பில் கமிட்டான படத்தில் மட்டுமே நடித்த நிலையில், பின்னர் ஒரேடியாக திரையுலகை விட்டு விலகினார். 

கொசுவலை போன்ற கருப்பு நிற சேலையில்... கவர்ச்சிகரமாக படவிழாவிற்கு வந்த ஸ்ருதிஹாசன்! ஹாட் போட்டோஸ்!

சாயிஷா திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும், சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். எனினும் கர்ப்பமாக இருக்கும் தகவலை கூட வெளியிடாமல் குழந்தையை ரகசியமாக பெற்றெடுத்தார். ஆர்யா தந்தையாகி விட்டதாக அவருடைய நண்பர் விஷால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து போட்ட பதிவு மூலம் சாயிஷா - ஆர்யா தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது தெரியவந்தது.

குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்னரும், மகளின் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த, ஆர்யா - சாயிஷா ஜோடி சமீபத்தில் ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து கூறும் விதமாக சாயிஷா தன்னுடைய மகளின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

ரஜினி, அஜித், விஜய், உள்ளிட்ட 10 முன்னணி நடிகர்கள் குழந்தையாக மாறுனா இப்படி தான் இருப்பாங்களோ? வைரல் போட்டோஸ்!

இந்தப் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்ட நிலையில் பலரும் ஆர்யாவின் மகள் ஆரியனா அப்படியே அவருடைய மனைவி சாயிஷா போலவே இருப்பதாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஆரியானாவின் இன்னும் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!