அஜித் நடித்து முடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிறது. மேலும் இந்த படத்தின் ரசிகர்கள் காட்சி நள்ளிரவு ஒரு மணிக்கு போடப்படும் என தகவல் வெளியாகி உள்ளதால், அஜித்தின் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
'துணிவு' திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான், 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளது. எனவே இருவருமே தங்களுடைய அடுத்தடுத்த பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கி விட்டனர்.
இந்நிலையில் ஏகே 62 படம் குறித்து ஏற்கனவே வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த படத்தில் வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாகவும்... ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
தன்னுடைய காந்த குரலால் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, அர்ஜுன் தாஸ் தான் அஜித்தின் ஏகே 62 படத்தில் இணைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் சுற்றி வருகிறது. இதுவரை இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நடிகர் - நடிகைகள் பற்றிய தகவல் குறித்து எவ்வித அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.