தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக இருந்த, சிம்ரன், ஜோதிகா, சினேகா போன்றவர்களுக்கு, நடிப்பிலும், அழகிலும் செம்ம டஃப் கொடுத்து வந்தவர் மீரா ஜாஸ்மின்.
27
'ரன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தவர். குறிப்பாக இவர் நடித்த சண்டைக்கோழி, ஆயுத எழுத்து, புதிய கீதை, நேபாளி, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே சில படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட மீரா ஜாஸ்மின், கடந்த இரண்டு வருடங்களாக தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் அழகில் மின்னி வருகிறார்.
67
மேலும் அவ்வபோது கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு, இளம் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார். அந்த வகையில், இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலர் திரையுலகில் நடிக்கும் போது கூட, இந்த அளவுக்கு மீரா ஜாஸ்மின் கவர்ச்சி காட்டியது இல்லை ஆனால் 40 வயதில் அளவு கடந்த கவர்ச்சியை வாரி இறைத்து வருவதாக கூறி வந்தனர்.
இந்நிலையில் தங்க நிற பட்டுப் புடவையில், தகதகவென மின்னும் அழகு தேவதை போல் மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள புகைப்படம், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படங்களை மீரா ஜாஸ்மின் வெளியிட்ட சில நிமிடங்களில் லைக்குகள் தாறுமாறாக எகிறியுள்ளது.