நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள திரைப்படம் வீர செம்ம ரெட்டி. இந்த படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் கொசுவலை போன்ற மெல்லிய கருப்பு நிற சேலையில்... லோ நெக்ஜாக்கெட்டில் வந்து ரசிகர்களை மயக்கிய புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சேலைக்கு ஏற்றாப்போல்.. காதில் பெரிய ஜிமிக்கி கம்மல், சிவப்பு நிற லிப்ஸ்டிக் என ரசிகர்களை அழகில் ஈத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் இதுவரை பார்த்திடாத வித்தியாசமான கோணத்தில் தன்னுடைய நடிப்பை ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் கமிட்டான போது மூத்த நடிகருடன் நடிக்கிறார் என்கிற சில விமர்சனங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள வீரசிம்மரெட்டி மற்றும் சிரஞ்சீவி ஜோடியாக நடித்துள்ள இரண்டு படங்களுமே இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது... மேலும் ஒரு சிறப்பு என கூறலாம்.
இந்த படங்களை தொடர்ந்து ஸ்ருதிஹாசன், பாகுபலி நாயகன் பிரபாஸுக்கு ஜோடியாக பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் 'சாஹு' படத்தில் நடித்து வருகிறார். இதிலும் பவர்ஃபுல் ரோலில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழை விட தெலுங்கு திரை உலகில் அதிக கவர்ச்சியை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருவதால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பட விழாவில் கலந்து கொண்ட போது நடிகர் ஸ்ருதிஹாசன், மூன்றாவது முறையாக கோபி சந்துடன் நடிக்க உள்ளதாகவும், தெலுங்கில் நிறைய நல்ல படங்களின் வாய்ப்புகள் கிடைப்பதாகவும் ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை தனக்கு கொடுத்து வருவது மிகவும் மகிழ்ச்சி என பேசினார்.
அதே போல் டோலிவுட்டில் மாசின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பாலையா, மிகவும் கூலான நபர். அவருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் என்றும் ஜெய் பாலையா என்று கோஷமிட்டு இறுதியில் கலகலப்பான நடனம் ஆடி மேடையையே அதிர வைத்தார் ஸ்ருதி.