தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். இவருக்கு அஞ்சலி செலுத்தும் விழா, மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஷகீலா, கஞ்சா கருப்பு போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷகிலா, மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்தும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் மிகவும் உருக்கமான கருத்துக்களை தெரிவித்தார். மேலும் தாழ்வு மனப்பான்மையுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் பற்றியும் ஷகிலா பேசினார். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் குறைபாடுகளை கேலி செய்யும் விதமாக திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
கொசுவலை போன்ற கருப்பு நிற சேலையில்... கவர்ச்சிகரமாக படவிழாவிற்கு வந்த ஸ்ருதிஹாசன்! ஹாட் போட்டோஸ்!
மலையாளத் திரை உலகில் நடிப்பதை நிறுத்திய பின்னர், பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த ஷகீலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப் பெரிய திருப்புமுனையாக அமைஅவர் மீதான கவர்ச்சி பார்வையை மாற்றியதால், பல படங்களில் குணசித்ர வேடத்திலும் ஷகிலா நடித்து வருகிறார். அதே போல், ஊடகங்களிலும், பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
ஷகிலா தற்போது, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விமல், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த கன்னி ராசி படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் மீண்டும் திரையுலகில் நடிக்க துவங்கி உள்ளதாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாகவும் இவருக்கான ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.