பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் அனுமதி..!

Published : Jan 07, 2023, 03:41 PM IST

பிரபல பாலிவுட்  இயக்குனர் ரோஹித் ஷெட்டி தான் இயக்கி வரும் வெப் தொடருக்கான,  படப்பிடிப்பின் போது, எதிர்பாராமல் நேர்ந்த விபத்து காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இந்தி திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

PREV
14
பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் அனுமதி..!

இயக்குனர் ரோஹித் ஷெட்டி, தனது வரவிருக்கும் வெப் தொடரான 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' படப்பிடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இவரின் கனவு வெப் தொடரான இதில், பல்வேறு ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் போன்ற காட்சிகள் உள்ளன. இவர் தன்னுடைய படக்குழுவினருடன், மிகவும் பாதுகாப்பான முறையில், கார் சேஸிங் காட்சியை படமாக்கி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 

24

உடனடியாக படக்குழுவினர் இயக்குனர் ரோஹித் ஷெட்டியை,  அருகே உள்ள காமினேனி மருத்துவமனையில் அனுமதித்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள், கையில் ஏற்பட்ட காயத்திற்கு உடனடியாக சிகிச்சை அளித்தது மட்டும் இன்றி,  சிறு அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். சில வாரங்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். 

தங்க நிற பட்டு புடவையில் தகதகவென ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின்..! ரசிகர்கள் உள்ளதை கொள்ளை கொண்ட கியூட் போட்டோஸ்!
 

34

இந்த சம்பவம், ரோஹித் ஷெட்டி ரசிகர்கள் மற்றும் பிரபாலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் இவர் உடல் நலம் தேறி படப்பிடிப்பில் கலந்து கொள்ள தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர் ரோஹித் ஷெட்டியை பொறுத்தவரை, அவர் இயக்கும் ஆக்ஷன் படங்களில் சண்டை காட்சிகள் ரசிகர்களால் யூகிக்க முடியாத அளவிற்கு படு மாஸாக இருக்கும். 
 

44

ரோஹித் ஷெட்டிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு, திரையுலகை பொறுத்தவரையில் மிகவும் மோசமான ஆண்டாக இருந்தது. இவர் யத்தில் வெளியான சர்க்கார் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் போட்ட தொகையை கூட மீட்க முடியாத படமாக மாறியது . எனினும்  2023 ரோஹித் ஷெட்டிக்கு பல பிளாக்பஸ்டர் படங்கள் அமையும் என எதிர்பார்க்கபாடகிறது.  இந்த ஆண்டு = ரோஹித் ஷெட்டி அஜய் தேவ்கனின் சிங்கம் 3, சித்தார்த் மல்ஹோத்ராவின் இந்திய போலீஸ் போர்ஸ் வெப் தொடர், சூர்யவன்ஷி 2, மற்றும் கோல்மால் 5 போன்ற படங்களின் மூலம் பார்வையாளர்களை மகிழ்விப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஷகிலாவுக்கு உதவி செய்த காமெடி நடிகர் கஞ்சா கருப்பு!
 

click me!

Recommended Stories