இதென்னப்பா பகல் கொள்ளையா இருக்கு... துணிவு, வாரிசு படத்தின் FDFS டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா?

First Published Jan 8, 2023, 12:26 PM IST

அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலே முதல் ஷோ டிக்கெட் தாறுமாறான விலைக்கு விற்கப்படும். அந்த வகையில் துணிவு, வாரிசு படங்களின் டிக்கெட் விலையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அஜித்தின் துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது. 9 வருடங்களுக்கு பின்னர் விஜய் - அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த இரண்டு படங்களும் வருகிற ஜனவரி 11-ந் திரையரங்குகளில் தேதி ரிலீசாக உள்ளது.

ரிலீசுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இரு படங்களுக்கு திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அதிகாலை 1 மணி காட்சியெல்லாம் திரையிடப்பட உள்ளதால், ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலே முதல் ஷோ டிக்கெட் தாறுமாறான விலைக்கு விற்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் வாரிசு மற்றும் துணிவு படத்தின் FDFS டிக்கெட் விலையெல்லாம் கேட்டால் தலைசுற்றிவிடும். அந்த அளவுக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அதிகபட்சமாக முதல் ஷோ டிக்கெட் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டு வருகிறதாம். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அதை வாங்கவும் கூட்டம் அலைமோதுகிறதாம்.

இதையும் படியுங்கள்... லண்டனில் தொடங்கப்பட்ட துணிவு புரோமோஷன்: வைரலாகும் வீடியோ!

மற்ற மாவட்டங்களிலும் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவும் மாறி உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் துணிவு படத்தை வெளியிடுகிறது. அதேபோல் சென்னை உள்பட முக்கியமான 4 ஏரியாக்களில் வாரிசு படத்தையும் அந்நிறுவனம் ரிலீஸ் செய்வதால், திரையரங்குகள் தைரியமாக டிக்கெட் விலையை கூட்டி விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இப்படி 2 ஆயிரம், 3 ஆயிரம் என டிக்கெட்டுகளை விற்பனை செய்வதைப் பார்த்தால் முதல் நாளிலேயே இரண்டு படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் கலெக்‌ஷனை அள்ளிவிடும் போல தெரிகிறது. அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டால் தான் இதற்கு ஒரு முடிவுகட்ட முடியும் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. 

இதையும் படியுங்கள்... துணிவு படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய தடை விதிப்பு... அந்த ஒரு காட்சியால் அஜித் படத்துக்கு வந்த சிக்கல்

click me!