தியேட்டரில் 1000 நாட்களை கடந்து ஓடும் சிம்பு படம்; சைலண்டாக சாதனை படைத்த STR!

First Published | Oct 22, 2024, 8:32 AM IST

Simbu movie runs 1000 days in theatre : சிம்பு நடித்த மாஸ்டர் பீஸ் படம் ஒன்று திரையரங்குகளில் ஆயிரம் நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்திருக்கிறது. அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.

Simbu

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனால் அது அசால்டாக 100 நாட்களை கடந்து ஓடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் தியேட்டரில் தாக்குப்பிடிப்பதே அபூர்வமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஓடிடி தளங்கள் தான். எந்த ஒரு புதுப்படம் ஆனாலும் அது தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்களில் ஓடிடியில் வந்துவிடுகிறது. இதனால் தியேட்டருக்கு செல்லும் ரசிகர்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

Silambarasan TR

இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் 100 நாட்கள் ஓடுவதே அரிதான ஒன்றாக இருக்கும் நிலையில், ஒரு தமிழ் படம் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. அதுவும் புதுப்படம் இல்லை, பழைய படம் ஒன்று ரீ-ரிலீஸ் ஆகி ஆயிரம் நாட்கள் ஓடி உள்ளது. இப்படி ஒரு மகத்தான சாதனையை படைத்தது வேறு யாருமில்லை நடிகர் சிம்பு தான். அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் தான் இப்படி ஒரு அரிதான சாதனையை படைத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்... வின்டேஜ் சிம்பு ரிட்டன் வண்டாரு; GOAT பட பிரபலத்துடன் இணையும் STR - வெளியான சூப்பர் அப்டேட்!

Tap to resize

Vinnaithaandi Varuvaayaa Movie

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் சிம்பு கார்த்திக் என்கிற கதாபாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக த்ரிஷா ஜெஸ்சி என்கிற ரோலிலும் நடித்திருந்தார். கோலிவுட்டில் இப்படி ஒரு காதல் படம் வந்ததில்லை என சொல்லும் அளவுக்கு காலம் கடந்து கொண்டாடப்படும் காதல் காவியமாக மாறி இருக்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படம் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம்.

Vinnaithaandi Varuvaayaa 1000 Days

அப்படி ரீ-ரிலீஸ் ஆன இப்படம் கடந்த சில வருடங்களாக தினசரி சென்னை விஆர் மாலில் உள்ள பிவிஆர் திரையரங்கில் மேட்னி ஷோ மட்டும் திரையிடப்பட்டு வந்தது. ரசிகர்களிடம் வரவேற்பு இருந்ததால் இப்படம் தொடர்ந்து திரையிடப்பட்டு தற்போது வெற்றிகரமாக ஆயிரம் நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. ஒரு ரீ-ரிலீஸ் படம் ஆயிரம் நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது இதுவே முதன்முறை ஆகும். இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தேசிங்கு பெரியசாமி படத்தை கைவிட்டாரா சிம்பு? அடுத்த படம் குறித்து STR தந்த ஹிண்ட்!

Latest Videos

click me!