Director Mari Selvaraj
பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான "கற்றது தமிழ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், துணை இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தான் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமோடு பயணித்த இவர், முதல் முறையாக இயக்குனராக திரையுலகில் களமிறங்கியது, கடந்த 2018ம் ஆண்டு வெளியான "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான். அப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இயக்குனர் வெற்றிமாறன், மூத்த இயக்குனர் பாரதிராஜா போன்ற பலரும் மாரி செல்வராஜை வியந்து பாராட்டினர்.
ஒரு வாழ்கை, ஒரு பயணம்; பீச்சில் என்ஜாய் பண்ணும் சூர்யா - கலக்கும் கங்குவாவின் இரண்டாம் சிங்கிள்!
Karnan Movie
"பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான், கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷை இயக்குகின்ற வாய்ப்பு. அவர்களுடைய காம்பினேஷனில் வெளியான "கர்ணன்" திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சில சர்ச்சைகளையும் இந்த திரைப்படம் சந்தித்தாலும், தன் சொந்த வாழ்க்கையில் சந்தித்த பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தான் தன்னுடைய படங்களை இயக்கி வருவதாக கூறியிருந்தார் மாரி செல்வராஜ். தமிழ் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனராக அவர் மாறினார்.
Maamannan
இந்த சூழலில் தொடர்ச்சியாக "Maamannan" என்கின்ற மெகா ஹிட் திரைப்படத்தையும், "Vaazhai" என்கின்ற மெகா ஹிட் திரைப்படத்தையும் கொடுத்து தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக அவர் மாறியிருக்கிறார். குறிப்பாக அண்மையில் வெளியான "வாழை" திரைப்படம் திரையரங்குகளிலும், மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் இறுதிவரை நல்ல வசூலை பெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி இந்த திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Karthi
இந்த சூழலில் தற்பொழுது பிரபல நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரமை வைத்து "பைசன்" என்ற படத்தை அவர் இயக்கி வருகின்றார். அந்த திரைப்படத்தை முடித்த பிறகு மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிகர் தனுஷை வைத்து ஒரு ஹிஸ்டாரிக்கல் திரைப்படம் அவர் எடுக்க உள்ளதாக இருந்தது. இருப்பினும் அந்த திரைப்படத்தை கையில் எடுக்கும் முன், பைசன் பட பணிகள் முடிந்ததும், prince pictures நிறுவனத்துடன் இணைந்து தற்பொழுது முன்னணி ஹீரோவாக திகழ்ந்துவரும் நடிகை கார்த்தியை வைத்து அவர் ஒரு திரைப்படத்தை இயக்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அட இவர் தான் சமந்தாவின் நியூ பாய் ஃபிரண்டா? ஹீரோ மாதிரி இருக்கும் இவர் யார் தெரியுமா?