Bigg Boss tamil Season 8: பிக்பாஸ் ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட 8 போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்து 3-ஆவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறிய நிலையில், இந்த வாரம் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இவர் பிக்பாஸ் வீட்டில் ஓவர் நல்லவன் போல் தன்னை காட்டி கொண்டு, ஃபேக்காக விளையாடியது தான், இவரது வெளியேற்றத்திற்கு காரணமாக பார்க்கப்பட்டது.
24
Bigg Boss Tamil Season 8 anchor Vijay Sethupathi
மேலும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தன்னுடைய வெளியேற்றத்திற்கு பாய்ஸ் டீம் தான் காரணம் என, வன்மத்தை அவர் விஜய் சேதுபதி முன்பே கக்கிய நிலையில், இதற்க்கு விஜய் சேதுபதி கமல்ஹாசன் போல் சுற்றி வளைத்து, புரியாத வார்த்தைகளை கொண்டு புதிர் போட்டு பேசாமல் நெற்றி பொட்டில் அடிதப்போல் பதிலடி கொடுத்து வெளியேறியது தரமான சம்பவமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வாரத்திற்கான ஆட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இன்றைய முதல் புரோமோவிலேயே பிக்பாஸ் இந்த வாரம் ஃப்ரீ நாமினேஷன் யார் 2 பேரை வேண்டுமானாலும் நீங்கள் காரணத்தோடு நாமினேட் செய்யலாம் என கூறிய நிலையில்... மொத்தம் 8 பேர் இந்த லிஸ்டில் பல்வேறு காரணங்கள் அடிப்படையில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த வாரம் ஆண்களில், சத்யா, முத்து குமரன், மற்றும் அருண் ஆகியோர் 3 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
44
Nominated Contestant List
இவர்களை தொடர்ந்து, பெண் போட்டியாளர்களில்... ஜாக்குலின், அன்ஷிகா, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா, மற்றும் சௌந்தர்யா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரங்களில் அடுத்தடுத்து 2 ஆண் போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஒரு பெண் போட்டியாளர் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வாரம் ஆண்களின் டீமில் இருந்து, பெண்கள் அணிக்கு கானா ஜெஃபிரியும், பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு சாச்சனாவும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.