தொடர்ச்சியாக சிம்பு நடிப்பில் வெளியான "அலை", "தம்", "கோவில்", "குத்து", "மன்மதன்", "தொட்டி ஜெயா", "சரவணன்" "வல்லவன்" மற்றும் "சிலம்பாட்டம்" போன்ற அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியது. கடந்த 2010ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" என்கின்ற திரைப்படம், சில வருடங்களுக்கு முன்பு ரீ ரிலீஸாகி தற்பொழுது 1000வது நாளையும் கடந்து ஓடி வருவது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு வரை மிகச் சிறந்த நடிகராக வலம் வந்த சிம்புவுக்கு, அதன் பிறகு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
தொடர்ச்சியாக அவருடைய நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸ் நுழைய முடியாமல் போனது. இந்நிலையில் மீண்டும் தன் உடலையும், தன்னையும் தயார் செய்து கொண்டு நல்ல பல படங்களை அவர் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான "மாநாடு" திரைப்படம் சிம்புவுக்கு மிகப்பெரிய கம் பேக் திரைப்படமாக அமைந்தது.