
இந்திய திரை உலகை பொறுத்தவரை பாலிவுட் உலகிற்கு ஒரு தனி மவுசு எப்பொழுதும் இருந்து வருகிறது. அதேபோல பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் உலக அளவில் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றனர். இருப்பினும் அந்த பாலிவுட் உலகையே இப்போது சில தென்னிந்திய நடிகர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரபாஸின் பாகுபலி மற்றும் கல்கி உள்ளிட்ட பல திரைப்படங்கள் பாலிவுட் உலகில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது ஹிந்தியில் அதிக ரசிகர்கள் பிரபாஸுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கதை சுத்தமா பிடிக்கல; மனசே இல்லாமல் இளையராஜா இசையமைத்து மெகா ஹிட்டான சிவாஜி படம்!
கன்னட திரை உலகை பொருத்தவரை பல ஆண்டுகளாகவே உச்சத்தை தொடுவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்த ஒரு திரையுலகம் என்றால் அது மிகையல்ல. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே கன்னட திரை உலகில் வெளியாகும் படங்கள், உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கிறது. குறிப்பாக காந்தாரா மற்றும் கேஜிஎப் போன்ற திரைப்படங்கள் கன்னட உலக பெருமையை, உலகெங்கும் பரவச் செய்திருக்கிறது. அந்த வகையில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் அவர்.
ஆக்சன் ஹீரோக்களுக்கு இணையாக, கொஞ்சும் நாயகிகளும் இப்பொழுது ஹிந்தி திரை உலகில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு பாலிவுட்டின் மெகா நடிகர் அமிதாப்பச்சனின் "குட் பை" என்கின்ற திரைப்படத்தில் அவரோடு நடித்து, பாலிவுட் உலகை கலக்கிய நடிகை தான் ராஷ்மிகா மந்தானா. ஹிந்தியில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது வருகின்றனர்.
மிகப்பெரிய திரைக்குடும்பத்திலிருந்து வருகிறார் என்ற பொழுதும், தன்னுடைய திறமையால் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நடிகர் தான் அள்ளு அர்ஜுன். அதிலும் புஷ்பா திரைப்படத்தின் வெற்றி இமாலய வெற்றியாக மாறியது. இப்போது தென்னகம் மட்டுமல்லாமல் பாலிவுட் உலகமும் புஷ்பா 2 திரைப்படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிப்பு அசுரனாக பலம் பெறுபவர் தனுஷ் ஏற்கனவே அவர் எப்படிப்பட்ட நடிகர் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஹிந்தியில் நல்ல படங்களில் நடித்து இப்போது பாலிவுட் ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் அவர். ஏற்கனவே தனுஷ் ஹாலிவுட் உலகிற்கும் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு சினிமாவின் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் விஜய் தேவாரகொண்டா. கடந்த 2022 ஆம் ஆண்டு பாலிவுட்டில் "லைகர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். உண்மையில் பாலிவுட் நடிகர்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு விஜய் தேவர்கொண்டாவுக்கும் கிடைத்தது. அவருடைய நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் உலக அளவில் ஹிட்டான நிலையில் பாலிவுட் ரசிகர்களும் விஜய் தேவர் கொண்டாவை ரசிக்கத் தொடங்கினர்.
சென்னையில் பிறந்து இன்று இந்திய திரையுலகை அசத்தி வரும் நடிகை தான் சமந்தா. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தான் இவர் பாலிவுட் உலகிலும் களம் இறங்கினார். அன்று தொடங்கி இந்த 12 ஆண்டுகளில், குறைந்த அளவிலான ஹிந்தி திரைப்படங்களிலேயே அவர் நடித்திருக்கிறார் என்றாலும், மிகப் பெரிய அளவிலான வரவேற்பை அவர் பாலிவுட் உலகில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய நடிப்பு குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் பிரபல நடிகர் ராம் சரண். எஸ்.எஸ். ராஜமவுலிக்கும் ராம்சரனுக்கும் ஒரு மிகப்பெரிய இணைப்பு கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. மகதீரா திரைப்படம் தொடங்கி ஆர்ஆர்ஆர் திரைப்படம் வரை ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களாக மாறியிருக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டு இவர் பாலிவுட் உலகில் களமிறங்கினார் இப்போது இந்தியிலும் இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று சொன்னாலே மக்கள் ஆர்ப்பரிக்கும் அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. அண்மையில் தான் இவர் பாலிவுட் உலகில் களம் இறங்கினார் என்றாலும் விஜய் சேதுபதி என்று சொன்னாலே வடக்கே உள்ள ரசிகர்களும் உற்சாகத்தில் திழைக்கும் அளவில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். அதே போல நடிகர் மாதவனும் பல ஆண்டுகளாகவே பாலிவுட் உலகில் மிகச் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதுவரை இந்த பட்டியலில் இருந்த நடிகர்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாக தான் பாலிவுட் உலகை மிரட்டி வருகின்றனர். ஆனால் 80களின் இறுதியில் இருந்தே தொடங்கி இப்போது வரை பல முன்னணி பாலிவுட் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துவரும் இரண்டு நடிகர்கள் தான் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
1330 திருக்குறளை விட உயர்ந்த பாடல்! எது தெரியுமா? என்.எஸ்.கிருஷ்ணன் கூறியதை பகிர்ந்த வாலி!