அட இவர் தான் சமந்தாவின் நியூ பாய் ஃபிரண்டா? ஹீரோ மாதிரி இருக்கும் இவர் யார் தெரியுமா?

First Published | Oct 21, 2024, 9:32 PM IST

Actress Samantha : பொதுவெளியில் ஒரு நபரோடு கைகளை கோர்க்குத்துக்கொண்டு சமந்தா சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Actress Samantha

இன்று இந்திய திரை உலகில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா, பல்லாவரம் பகுதியை சேர்ந்த பெண் என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, மாடலிங் துறையில் களமிறங்கியவர் சமந்தா. கடந்த 2010ம் ஆண்டு தமிழில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதே திரைப்படத்தை தெலுங்கிலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய நிலையில் அதில் நாயகியாக நடித்ததும் சமந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த திரைப்படத்தில் தன்னோடு இணைந்து நடித்த பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலிக்க தொடங்கினார் சமந்தா.

சிறையில் R.J பாலாஜி; மெய்சிலிர்க்க வைக்கும் கதை - வெளியானது சொர்க்கவாசல் டீசர்! மாஸ்!

Naga Chaitanya

கடந்த 2010ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான சாம், வெகு சீக்கிரத்தில் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்து டாப் நாயகியாக மாறினார். தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளை காட்டிலும், தெலுங்கு மொழியில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ள சமந்தா, கடந்த 2017ம் ஆண்டு, சுமார் 7 ஆண்டுகளாக தான் காதலித்து வந்த பிரபல நடிகர் நாக சைதன்யாவை இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். சுமார் 4 ஆண்டுகள் எந்தவித சண்டை சச்சரவுகளும் இல்லாமல் இந்த ஜோடி மிகவும் அன்போடு வாழ்ந்து வந்தனர்.

Tap to resize

Kollywood Actress

இந்த சூழலில் தான் கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் நாக சைதன்யா, சமந்தாவை விவாகரத்து செய்தார். விரைவில் அவருக்கு பிரபல நடிகை சோபிதாவுடன் திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் 37 வயதை கடந்தும், இப்போது வரை சமந்தா தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டு வந்த அவர், பெரிய அளவில் திரைப்படங்களில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் திரை உலகிற்கு கம் பேக் கொடுத்து நல்ல பல படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் அண்மையில் சமந்தா அறிமுகம் செய்தார்.

Samantha Ruth Prabhu

இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா ஒரு அழகிய வாலிபருடன் கைகளை கோர்த்துக்கொண்டு நடந்து செல்லும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண நிகழ்வில் இருந்து அந்த நபருடன் சமந்தா கைகளை கோர்த்துக்கொண்டு வெளியேறிய வீடியோ வைரலான நிலையில் இவர் தான் சமந்தாவின் புதிய காதலர் என்றும், அவர் யார் என்பது தெரியவில்லை என்கின்ற தகவலும் தீயாய் பரவியது. 

இந்த சூழலில் தர்ஷினி சூர்யா என்கின்ற நபர், இந்த விஷயம் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். இவர் நடிகை சமந்தாவின் தோழி என்று கருதப்படுகிறது. என்றாலும் அவர் வெளியிட்ட தகவலின் படி அந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும். அவர் சமந்தாவின் மிக மிக நெருங்கிய நண்பர், பல ஆண்டுகளாக சமந்தாவுக்கும் அவருக்கும் ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளார். அவருடைய இல்ல விழாவில் கலந்துகொண்டு சமந்தா திரும்பியபோது எடுக்கப்பட்ட வீடியோ அது என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்த வாரம் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட 8 போட்டியாரங்கள் இவர்கள் தான்?

Latest Videos

click me!