ஓடிடியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 ஒர்த்தான மூவீஸ் & வெப் சீரிஸ் இதோ

Published : Oct 22, 2024, 07:45 AM ISTUpdated : Oct 22, 2024, 07:50 AM IST

Top 10 Most Watched Movies and Web Series : அக்டோபர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஓடிடி தளங்களில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை பார்க்கலாம்.

PREV
111
ஓடிடியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 ஒர்த்தான மூவீஸ் & வெப் சீரிஸ் இதோ
Top 10 Most Watched Movies and Web Series

மக்கள் தியேட்டரில் படம் பார்ப்பதை காட்டிலும் தற்போது ஓடிடி தளங்களில் படம் பார்ப்பதை அதிகம் விரும்புகிறார்கள். இதனால் ஓடிடி தளங்களும் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. அதுமட்டுமின்றி இந்திய படங்கள் மட்டுமல்லாது ஓடிடியில் உலகளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த படங்களும் காண கிடைப்பதால் அதை பயன்படுத்துவோம் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அக்டோபர் 14 முதல் 20-ந் தேதி வரை ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் டாப் 10 பட்டியலை பார்க்கலாம்.

211
CTRL Movie

10. விக்ரமாதித்யா இயக்கத்தில் இந்தியில் வெளியான படம் தான் CTRL. திரில்லர் திரைப்படமான இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்த படம் 17 லட்சம் பார்வைகளுடன் 10ம் இடம் பிடித்து இருக்கிறது. 

311
Fabulous Lives of Bollywood Wives

9. நான்கு பெண்களின் பிசினஸ், பேமிலி மற்றும் பிரெண்ட்ஷிப்பை மையமாக கொண்ட வெப் தொடர் தான் இந்த Fabulous Lives of Bollywood Wives. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இந்த வெப் தொடர் 18 லட்சம் பார்வைகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

411
Citadel: Diana

8. அக்டோபர் 10-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன வெப் தொடர் தான் சிட்டாடெல் டயானா. இந்த வெப் தொடர் கடந்த வாரம் மட்டும் 19 லட்சம் பார்வைகளை பெற்று 8ம் இடத்தில் உள்ளது.

511
Gutar Gu - Season 2

7. அமேசான் எம் எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிவரும் ஒரு ரொமாண்டிக் வெப் தொடர் தான் இந்த Gutar Gu - Season 2. இந்த வெப் தொடர் 20 லட்சம் பார்வைகளுடன் 7-ம் இடத்தை பிடித்திருக்கிறது.

611
Playground 4

6. Playground வெப்தொடரின் நான்காவது சீசன் இந்த வாரம் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர் பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது. இதனை 21 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது அமேசான் எம்.எக்ஸ். பிளேயர் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

711
The Penguin

5. ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி இருக்கும் வெப் தொடர் தான் தி பெண்குயின். டாப் 10 பட்டியலில் 5ம் இடத்தில் உள்ள இந்த வெப் தொடர் 22 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்... பிரபல தென்னிந்திய நடிகைகளும் அவர்களது சொத்து மதிப்பும்!!

811
Taaza Khabar 2

4. பூவன் பாமின் இயக்கிய Taaza Khabar என்கிற வெப்தொடரின் இரண்டாவது சீசன் கடந்த வாரம் வரை டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வரும் இந்த வெப் தொடர் 23 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

911
Raat Jawaan Hai

3. சுமித் வியாஸ் இயக்கிய இந்தி வெப் தொடர் தான் Raat Jawaan Hai. கடந்த வாரம் 10ம் இடத்தில் இருந்த இந்த வெப் தொடர் இந்த வாரம் 24 லட்சம் பார்வைகளுடன் டாப் 10 பட்டியலில் 3ம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வெப் தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

1011
Reeta Sanyal

2. தந்தையின் கொலைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் ஒரு பெண் வழக்கறிஞரின் கதை தான் இந்த Reeta Sanyal. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடர் 25 லட்சம் பார்வைகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

1111
The Great Indian Kapil Sharma Show

1. கடந்த வாரம் 2ம் இடத்தில் இருந்த கபில் ஷர்மாவின் The Great Indian Kapil Sharma Show நிகழ்ச்சி இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸில் ஸ்டிரீம் ஆகி வரும் கபில் ஷர்மாவின் இந்நிகழ்ச்சி 35 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்... தமிழகத்தில் 100 கோடி வசூலை எட்ட உள்ள 'வேட்டையன்' படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories