பட வாய்ப்பின்றி கஷ்டப்பட்ட நடிகர் கூல் சுரேஷுக்கு சிம்பு கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு - எந்த படத்தில் தெரியுமா?

First Published | Sep 20, 2022, 9:21 AM IST

வெந்து தணிந்தது காடு படத்தை பல மாதங்களாக விழுவிழுந்து புரமோட் செய்த கூல் சுரேஷ், இதற்குமுன் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும், சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தவித்து வந்தார்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீசுக்கு முன்பே மக்கள் மத்தியில் பேமஸ் ஆனதற்கு நடிகர் கூல் சுரேஷும் ஒருவர். இவர் இந்த ஆண்டு ரிலீசான படங்களுக்கெல்லாம் முதல் ஷோ பார்க்க தியேட்டருக்கு வந்து ‘வெந்து தணிந்தது காடு.... வணக்கத்த போடு’ என பல மாதங்களாக குரல் கொடுத்து வந்தார். இதுவே ஒரு டிரெண்டாக மாறியதால், சமூக வலைதளங்களில் டிரெண்டானார் கூல் சுரேஷ்.

சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசானபோது கூல் சுரேஷ் தியேட்டருக்கு ஆடி காரில் வந்திருந்தார். அப்போது அவரின் கார் மீது ஏறி ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றதில் அந்த காரின் கண்ணாடி உடைந்தது. இதனால் கடும் அப்செட் ஆகிப் போனார் கூல் சுரேஷ். பின்னர் அவர் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது அவருக்கு தியேட்டர் வாசலிலேயே அபிஷேகம் செய்த நிகழ்வுகளும் அரங்கேறின.

இதையும் படியுங்கள்... கணவரின் முதல் திருமணத்தின் போது குழந்தையாக இருந்த நடிகைகள் யார்... யார் தெரியுமா?

Tap to resize

இவ்வாறு வெந்து தணிந்தது காடு படத்தை பல மாதங்களாக விழுவிழுந்து புரமோட் செய்த கூல் சுரேஷ், இதற்குமுன் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும், சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தவித்து வந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு நடிகர் சிம்பு வாய்ப்பு தர வேண்டும் என்றும் சோசியல் மீடியாவில் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்ட நடிகர் சிம்புவிடம் கூல் சுரேஷுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சிம்பு அவர் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார். அதன்படி சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள கொரோனா குமார் படத்தில் கூல் சுரேஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... ‘வல்லமை’லாம் இல்லைங்க... அஜித் படத்துக்காக ஜெய்சங்கரின் கிளாசிக் ஹிட் பட டைட்டிலை தட்டித்தூக்கிய எச்.வினோத்

Latest Videos

click me!