பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சைஃப் அலி கான் முதன்முதலில் கடந்த 1991-ம் ஆண்டு தன்னைவிட 12 வயது மூத்தவரான அம்ரிதா சிங்கை மணந்தார். அப்போது நடிகை கரீனா கபூருக்கு வெறும் 11 வயது தானாம், அவர் சைஃப் - அம்ரிதா திருமணத்திற்கு தந்தை ரந்தீர் கபூருடன் வந்திருந்ததாகவும், அப்போது அவர் சைஃபை அங்கிள் என்று அழைத்து, வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கே.ஜி.எஃப் 2 படத்தில் வில்லனாக மிரட்டியவரும், பாலிவுட் நட்சத்திரமுமான சஞ்சய் தத், கடந்த 1987-ம் ஆண்டு ரிச்சா ஷர்மாவை முதல் திருமணம் செய்து கொண்டார். அவர் 1996 இல் இறந்துவிட்டதால், பின்னர் 1998-ல், ரியா பிள்ளை என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் சில மாதங்களில் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து மூன்றாவதாக மன்யதாவை 2008ல் திருமணம் செய்துகொண்டார். சஞ்சய் தத்தின் முதல் திருமணத்தின் போது மன்யதாவுக்கு வெறும் 9 வயதுதான்.
பாலிவுட்டின் மூத்த நடிகரான கபீர் பேடி 4 திருமணங்களை செய்து கொண்டார். அவரது நான்காவது திருமணம் கடந்த 2016ம் ஆண்டு நடந்தது. அவர் தன்னைவிட கிட்டத்தட்ட 29 வயது இளையவரான பர்வீன் துசாஞ் என்பவரை மணந்தார். கபீர் பேடி கடந்த 1969-ம் ஆண்டு ப்ரோதிமா கௌரியை முதன்முதலில் திருமணம் செய்து கொண்டபோது, பர்வீனுக்கு வெறும் 6 வயதுதானாம்.