நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'வானம்' படத்தின் இயக்குனர் கிருஷ் ஜகர்லாமுடி முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
'வானம்' பட இயக்குநர் கிரிஷ் தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். மருத்துவர் பிரீத்தி சல்லா என்பவரை தான் கிரிஷ் ரகசியமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
25
Krish Jagarlamudi second marriage
இயக்குநர் க்ரிஷ் ஏற்கனவே ரம்யா என்கிற மருத்துவரை கடந்த 2016 இல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணமான இரண்டே வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஒரு நடிகையுடன் இருந்த ரகசிய தொடர்பு காரணமாக இவர்கள் பிரிந்ததாக தெரிவித்தனர்.
விவாகரத்துக்கு பின்னர் கிரிஷ் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது திடீரென ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது திருமணம் நடந்து முடிந்த நிலையில், இந்த மாதம் 16-ஆம் தேதி திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
45
Wedding photos
கிரிஷின் முதல் மனைவி ரம்யா போலவே... தற்போது இவர் திருமணம் செய்து கொண்டுள்ள பிரீத்தி சல்லாவும் ஒரு மருத்துவர் ஆவார். ஹைதராபாத்தை சேர்ந்த பிரீத்தி சல்லாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தாகி விட்டதாகவும், அவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக அறியப்படுகிறார். மேலும் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களை இயக்கி உள்ளார். தற்போது, அனுஷ்கா நடித்து வரும் 'காட்டி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். பவன் கல்யாணி வைத்து, ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில்... இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் கிருஷ் சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கிய பிரபலமானது குறிப்பிடத்தக்கது.