களவாணி படத்துல KGF நாயகன் யாஷ் நடிச்சிருக்காரா? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!

Published : Nov 11, 2024, 07:46 PM IST

கே.ஜி.எப் திரைப்படத்தில் ராக்கி பாய் ஆக நடித்து பான் இந்தியா ஹீரோவாக உயர்ந்துள்ள கன்னட நடிகர் யாஷ், களவாணி படத்தில் நடித்துள்ள தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

PREV
15
களவாணி படத்துல KGF நாயகன் யாஷ் நடிச்சிருக்காரா? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!
Kalavani Movie

கன்னட திரையுலகில் தலையெழுத்தையே மாற்றிய படம் என்றால் அது கேஜிஎப் தான். அப்படத்திற்கு முன்னர் வரை பிற மொழி படங்களை மட்டுமே பெரும்பாலும் ரீமேக் செய்து வந்த கன்னட சினிமாவை உலகறிய செய்த படம் கே.ஜி.எப். பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் ராக்கி பாய் என்கிற மாஸான கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருந்தார் யாஷ். இப்படம் பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்தனர்.

25
KGF Movie

வழக்கமாக இரண்டாம் பாக படங்கள் என்றாலே சொதப்பி விடும் என்கிற பிம்பம் இருந்தது. அதை கேஜிஎப் 2 கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி தகர்த்தெரிந்தது. கேஜிஎப் முதல் பாகத்தை விட அதன் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. கேஜிஎப் இரண்டாம் பாகம் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடி வசூலித்திருந்தது. தமிழ்நாட்டிலும் இப்படம் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆகி அப்படத்தை வசூலில் ஓவர்டேக் செய்தது.

இதையும் படியுங்கள்... 34 வயசு கவினுக்கு ஜோடி... 38 வயசு யஷ்ஷுக்கு நயன்தாரா அக்காவா? டென்ஷனான லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

35
KGF Yash

கேஜிஎப் 2 படத்தின் வெற்றிக்கு பின்னர் 2 ஆண்டுகளாக தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிடாமல் இருந்த யாஷ், அண்மையில் அவரின் அடுத்த பட ஷூட்டிங்கை தொடங்கினார். அதன்படி டாக்ஸிக் என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார் யாஷ். இப்படத்தை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் யாஷுக்கு அக்காவாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். டாக்ஸிக் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது பான் வேர்ல்டு படமாக தயாராகி வருகிறது.

45
Yash in Kalavani Movie Remake

கன்னட திரையுலகில் அசுர வளர்ச்சி கண்டு பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ள யாஷ், கேஜிஎப் படத்தில் நடிக்கும் முன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை ரீமேக் படங்கள் தான். அதில் ஒன்று தான் தமிழில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான களவாணி திரைப்படம். இப்படத்தின் கன்னட ரீமேக்கில் தான் நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

55
Kalavani Movie Kannada Remake Kiraathaka

கேஜிஎப் போன்ற மாஸ் படத்தில் நடித்து பிரபலமான யாஷ், களவாணி போன்ற சிறு பட்ஜெட் படத்திலும் நடித்துள்ள தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. களவாணி படம் கன்னடத்தில் கிராதகா என்கிற பெயரில் கடந்த 2011-ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் ஹீரோயினாக ஓவியா தான் நடித்திருந்தார். அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. களவாணி பட ரீமேக்கான கிராதகாவில் யாஷ் நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மீண்டும் கேங்ஸ்டராக களமிறங்கும் கேஜிஎப் நாயகன்... புது லுக்குடன் டாக்ஸிக் படத்துக்கு பூஜை போட்ட யாஷ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories