தயாரிப்பாளர் ரவியின் மகள் நிமிஷா; கோலாகலமாக நடந்த வெட்டிங் ரிசெப்ஷன் - ஒன்று கூடிய கோலிவுட்!

First Published | Nov 11, 2024, 6:53 PM IST

Producer Ravi : பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவருமான ரவி கொட்டரக்காராவின் மகள் நிமிஷாவிற்கு கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.

Keerthy Suresh

மலையாள மொழி திரைப்படங்களில் பெரிய அளவில் புகழ்பெற்ற தயாரிப்பாளர் தான் ரவி, தமிழிலும் பல திரைப்படங்களை இவர் தயாரித்து வழங்கியுள்ளார் இவர். திரைப்பட தயாரிப்பாளராக இருப்பது மட்டுமல்லாமல் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராகவும் கடந்த சில ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறார் ரவி.

புஷ்பா 2; ஒரே ஒரு பாடல்; சமந்தாவின் இடத்தை நிரப்பிய ஸ்ரீலீலா - வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Sivakumar

இந்த சூழலில் அவருடைய மகள் நிமிஷாவிற்கு குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் திருமணம் நடந்துள்ளது. விஷ்ணு என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார், இளம் வயதிலேயே ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்ட நிமிஷாவிற்கு இந்திய பாரம்பரியபடி தற்பொழுது திருமணம் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அவர் ஒரு உணவு மேலாண்மை அதிகாரியாக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tap to resize

shoba

இந்நிலையில் கேரளாவில் நிமிஷாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாராக நிகழ்ந்து வரும் மம்மூட்டி அவருடைய மனைவி சுலபாத்துடன் நேரில் வந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டார். அது மட்டும் அல்லாமல் பல முன்னணி மலையாள திரைப்பட நட்சத்திரங்கள் நேரில் வந்து இந்த தம்பதிகளை வாழ்த்தி சென்றனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை கணேஸ் பிக்சர்ஸ் என்கின்ற நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது. அந்த தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் தான் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. 

Vasu

தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து வழங்கி இருக்கிறார். அதில் சில திரைப்படங்கள் தேசிய விருதுகளையும், பன்னாட்டு விருதுகளையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேரளாவில் திருமணம் நடந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

nimisha

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல முன்னணி பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், தளபதி விஜயின் தந்தை மற்றும் தாயார், பிரபல மூத்த தமிழ் திரை உலக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலரும் நேரில் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை மணமகளுக்கு தெரிவித்தனர்.

குருதி புனல் முதல்; உத்தம வில்லன் வரை - தமிழ் சினிமா தாமதமாக கொண்டாடிய கமலின் டாப் 5 படங்கள்!

Latest Videos

click me!