புஷ்பா 2; ஒரே ஒரு பாடல்; சமந்தாவின் இடத்தை நிரப்பிய ஸ்ரீலீலா - வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Actress Sreeleela : அல்லு அர்ஜுன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள புஷ்பா 2 படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் பிரபல நடிகை ஸ்ரீலீலா.

Samantha

கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன்,நடிகை ராஷ்மிக்கா மந்தனா, சமந்தா, சுனில் மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைப்படம் தான் புஷ்பா. உலக அளவில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அது மாறியது. இந்த நிலையில் அந்த திரைப்படத்தை முடித்த பிறகு இந்த மூன்று ஆண்டுகளில் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல், தன்னுடைய புஷ்பா படத்தின் இரண்டாம் பாக பணிகளில் ஈடுபட்டு வந்தார் அல்லு அர்ஜுன். தற்போது புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குருதி புனல் முதல்; உத்தம வில்லன் வரை - தமிழ் சினிமா தாமதமாக கொண்டாடிய கமலின் டாப் 5 படங்கள்!

Pushpa Movie

இந்த ஆண்டின் துவக்கத்திலேயே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது டிசம்பர் மாதம் 5ம் தேதி உலக அளவில் அந்த திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக தமிழில் இன்னும் எந்த திரைப்படத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்கவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.


Pushpa 2 Movie

சென்னையில் பிறந்து வளர்ந்த அல்லு அர்ஜுன் தெலுங்கு திரை உலகின் மிகச்சிறந்த நடிகராக கடந்த பல ஆண்டுகளாகவே திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புஷ்பா படத்தில் வெளியான பல பாடல்களும் மெகா ஹிட் ஆன நிலையில், சமந்தா நடனத்தில் வெளியான ஊ சொல்றியா மாமா பாடல் பட்டிதொட்டி எங்கும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Pushpa 2 Sreeleela

இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அதேபோல ஒரு குத்துப் பாடல் இருக்கின்றது. இந்த பாடலுக்கு பிரபல தெலுங்கு திரையுலக நடிகை ஸ்ரீலீலா நடனமாடி இருக்கிறார். புஷ்பா படத்தில் நடனமாட சமந்தா அந்த ஒரு பாடலுக்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படும் நிலையில், தற்பொழுது ஸ்ரீலீலா இந்த ஒரே ஒரு பாடலில் நடனமாட ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படத்தில் உள்ள மட்ட பாடலில் நடனமாட, த்ரிஷாவிற்கு முன் ஸ்ரீலீலாவிடம் தான் கால்ஷீட் கேட்கப்பட்டதாகவும், ஆனால் ஒரே ஒரு பாடலுக்கு தன்னால் நடனமாட முடியாது என்று அவர் மறுத்ததாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூவி சான்ஸ் இல்லனா என்ன ஓடிடியில் கலக்கும் சமந்தா – எத்தனை கோடி சம்பளம் வாங்குறாரு தெரியுமா?

Latest Videos

click me!