Samantha OTT Salary
Samantha Salary on OTT : தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய காலகட்டத்தில் திரையரங்கிற்கு வரும் புதிய படங்கள் ஒரு மாதம், 15 நாட்களுக்குள்ளாக ஓடிடி தளத்திற்கு வந்துவிடும். ஒரு சில படங்கள் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியிடப்படும். இதன் காரணமாக ஓடிடி தளங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. சினிமா மட்டுமின்றி புதிய தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த வேட்டையன் படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாக அமேசான் பிரைமில் வெளியானது.
Citadel: Honey Bunny, Samantha Salary on OTT
ஹார்ட் பீட், உப்பு புளி காரம், கோலி சோடா ரைஸிங் என்ற வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகி வெற்றி நடை போடுகின்றன. ஃபேமிலி மேன், பிரேக்கிங் பேட் உள்ளிட்ட வெப் சீரிஸ் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகர், நடிகைகள் ஓடிடி தளத்தில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் ஓடிடி வெப் சீரிஸ்களில் நடித்துள்ளனர்.
Highest Paid Actress on OTT, Samantha
அந்த வகையில் ஓடிடி தளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் சமந்தா தான் நம்பர் 1 இடத்தில் உள்ளார். கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் வெளியாகியிருந்தது. அதன் பிறகு சமந்தா நடிப்பில் நேரடியான தமிழ் படம் வெளியாகவில்லை. சகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படம் வெளியானது. கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் சமந்தா ஓடிடி தளங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
Citadel: Honey Bunny, Samantha
இதற்கு முன்னதாக ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது சிட்டாடெல் ஹனி பன்னி என்ற வெப் சீரிஸீல் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
Samantha, Highest Paid Actress on OTT
இந்த சீரிஸ்க்காக சமந்தாவிற்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மற்ற நடிகைகள் யாரும் இவ்வளவு சம்பளம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஓடிடி தளங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் சமந்தா நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். இதே போன்று பாலிவுட் நடிகை கரீனா கபூரும் ரூ.10 கோடி வரையில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.