சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் நவம்பர் 14ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படம் புது சிக்கல் ஒன்றில் சிக்கி உள்ளது.
சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இதற்கு முன்னர் அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ள சிவா, நடிகர் சூர்யா உடன் முதன்முறையாக பணியாற்றியுள்ள படம் இதுவாகும். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது.
24
Suriyas Kanguva
கங்குவா திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில், நடித்துள்ளார். அதில் கங்குவா என்பது கடந்த காலத்தில் வரும் சூர்யாவின் பெயர், அதேபோல் பிரான்சிஸ் என்பது நிகழ்காலத்தில் வரும் சூர்யாவின் பெயர். இதில் பிரான்சிஸ் கேரக்டர் படத்தில் வெறும் அரை மணி நேரம் தான் வருமாம். எஞ்சியுள்ள 2 மணிநேரமும் வரலாற்று காட்சிகள் மட்டுமே இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.
அதேபோல் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் நடிகர் சூர்யா புரமோஷனில் முழுவீச்சாக ஈடுபட்டு உள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி என பல்வேறு மாநிலங்களில் இடைவிடாது புரமோஷன் செய்து வருகிறார் சூர்யா.
44
kanguva Movie Terms Issue
ரிலீசுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கங்குவா திரைப்படம் தற்போது புது சிக்கலில் சிக்கி இருக்கிறது. அதன்படி 75 - 25 என்கிற ஷேர் டீலிங்கிற்கு பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் சம்மதம் தெரிவிக்காததால் அவர்கள் தங்கள் திரையரங்குகளில் கங்குவா பட முன்பதிவையும் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த பிரச்சனை புதன்கிழமை வரை நீடிக்கும் என கூறப்படுவதால் அது படத்தின் வசூலையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் சக்கைப்போடு போட்டு வருவதால் அதிகளவிலான தியேட்டர்கள் கங்குவா படத்திற்கு கிடைப்பதும் கேள்விக்குறி தான் என கூறப்படுகிறது.