தொக்கா மாட்டிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்; இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ

First Published | Nov 11, 2024, 2:18 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நான்கு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். அதன்படி முதல் வாரத்தில் ரவீந்தர் சந்திரசேகரும், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா எலிமினேட் ஆன நிலையில், நான்காவது வாரத்தில் யாரும் எலிமினேட் ஆகாமல் தப்பித்தனர். இதையடுத்து கடந்த வார இறுதியில் சுனிதா குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.

Jacquiline, Deepak

சுனிதா எலிமினேட் ஆன பின்னர் இந்த வாரம் 20 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். இதில் கடந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் இந்த வாரம் தொக்காக மாட்டி உள்ளனர். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் மொத்தமுள்ள 20 போட்டியாளர்களில் 13 போட்டியாளர்கள் நாமினேட் ஆகி உள்ளனர். இதில் உள்ளே புதிதாக வந்த ரயான் தவிர எஞ்சியுள்ள 5 வைல்டு கார்டு போட்டியாளர்களும் இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... எதிர்பாராத எலிமினேஷன்; பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதா இதுவரை வாங்கிய சம்பவம் எவ்வளவு?

Tap to resize

Bigg Boss Nomination

நாமினேட் ஆகியுள்ள நபர்களில் ஆண்களில் இருந்து தீபக், ஷிவக்குமார், ஜெஃப்ரி, ராணவ், ரஞ்சித், சத்யா ஆகிய ஆறு பேர் நாமினேட் ஆகி உள்ளனர். அதேபோல் பெண்கள் அணியில் இருந்து செளந்தர்யா, ஜாக்குலின், வர்ஷினி வெங்கட், தர்ஷிகா, ரியா, மஞ்சரி மற்றும் சாச்சனா ஆகிய 7 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். இவர்கள் 13 பேரில் இருந்து தான் இந்த வார இறுதியில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட இருக்கிறார். அது மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் அந்த எலிமினேஷன் இருக்கும்.

Wildcard Contestants

அதேபோல் பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக அருண் தேர்வாகி உள்ளதை போல், இந்த வாரம் அணிமாறி உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி பெண்கள் அணியில் இருந்து அன்ஷிதா ஆண்கள் அணிக்கு சென்றுள்ளார். அதேபோல் ஆண்கள் அணியில் இருந்து ராயன் பெண்கள் அணிக்கு சென்றிருக்கிறார். இவர்கள் இருவரும் அணிமாறி சென்றுள்ளதால் எந்த அணியில் குழப்பம் ஏற்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் எவிக்‌ஷனில் ட்விஸ்ட்! எஸ்கேப் ஆன சாச்சனா; எலிமினேட் ஆனது யார்?

Latest Videos

click me!