
இயக்குனர் சிகரம் பாரதி ராஜாவால், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டவர் நெப்போலியன். இவர் நாயகனாக நடித்த, 'புது நெல்லு புது நாத்து' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல், வில்லன், குணச்சித்திர நடிகர், என சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
குறிப்பாக இவர் நடித்த எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர். சினிமாவில் முன்னணி வேடத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே... அதிரடியாக தன்னுடைய தன்னுடைய மாமா மூலம் திமுக கட்சியில் இணைந்த நெப்போலியன்,வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக மாறினார். இதை தொடர்ந்து திமுக கட்சி சார்பில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பி-யாக மாறினார். மத்திய இணை அமைச்சராகவும் இருந்த நெப்போலியன், தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக முழுவதுமாக அரசியலில் இருந்து விலகி அமெரிக்காவுக்கு சென்றார்.
நெப்போலியன் மகன் தனுஷுக்கு சிறுவயதிலிருந்தே, தசை சிதைவு நோய் இருந்தது. 3 வயதில் இந்த பிரச்சனை கண்டறியப்பட்ட நிலையில், 10 வயதில் முழுவதுமாக நடக்க முடியாமல் போனது. ஆயுர் வேத சிகிச்சை முறையில், ஓரளவு கட்டுக்குள் வந்த போதும் மேல் சிகிச்சைக்காக... குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
நடிகர் நெப்போலியன் மற்றும் அவருடைய மனைவிக்கு இரண்டாவது மகனை விட, மூத்த மகன் தனுஷ் மிகவும் ஸ்பெஷல், காரணம் திருமணம் ஆகி 5 வருடம் ஆன பின்னர் தவமாய் தவமிருந்து பிறந்தவர் என்பதால் தான். தனுஷ் பிறப்பதற்கு முன், நெப்போலியன் ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கு சுதாவும் செல்வது வழக்கம். இப்படி சுற்றி கொண்டே இருந்ததால்... 3 முறை அபாஷன் ஆகியுள்ளது. பின்னரே தனுஷ் பிறந்துள்ளார்.
எதிர்பாராத எலிமினேஷன்; பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதா இதுவரை வாங்கிய சம்பவம் எவ்வளவு?
1000 கோடி சொத்துக்கு அதிபதியாக நெப்போலியன் இருந்தாலும், சுதா தான் தன்னுடைய மகனுக்கு தேவையான அனைத்தையும் செய்வார். அதே போல், குழந்தைகளுக்கான உணவிலும் அதிக அக்கறை காட்டுவார். சுதா வெஜிடேரியன் என்றாலும், குடும்பத்திற்காக நான் வெஜிட்டேரியன் செய்ய கற்று கொண்டார். இதை இர்ஃபானுக்கு கொடுத்த பேட்டியில் அவரே கூறி இருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய மகன் தனுஷ் திருமண வயதை எட்டியதும், தன்னுடைய கடமையை பூர்த்தி செய்யும் விதமாக மகனுக்கு பல இடங்களில் பெண் தேடி வந்தார். மகனை திருமணம் செய்து கொள்ளும் பெண் தமிழ் பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில், திருநெல்வேலியை சேர்ந்த உறவினர் பெண்ணான அக்ஷயா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி தனுஷ் - அக்ஷயா திருமண நிச்சயதார்த்தம் முடிந்த சில மாதங்களையே இவர்களுடைய திருமணம், ஜப்பானில் தமிழ் கலாச்சாரத்தின் படி வெகு விமர்சியாக நடந்து முடித்துள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் தொடர்ந்து வைரல் ஆனது. மேலும் திருமணத்திற்கு பின்னர் தனுஷ் மற்றும் அக்ஷயா இருவரும் பல பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருமணத்திற்கு முன் அக்ஷயாவுக்கு நெப்போலியன் மகன் தனுஷ் போட்ட ஒரே ஒரு கண்டீஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 6 மாசத்துல தனுஷுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுவோம் - நெப்போலியன் ஓபன் டாக்
அதாவது தனுஷுக்கு விதவிதமான சாப்பாடுகள் சாப்பிடுவதில் அதிக விருப்பம் கொண்டவர். இதன் காரணமாகவே உணவு பற்றி ரிவியூ செய்யும் இர்ஃபான் என்றால் மிகவும் பிடிக்கும். தென்னிந்திய உணவுகளை விரும்பி சாப்பிடும் தனுஷ்... தான் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண்ணுக்கு நன்றாக சமைக்க தெரிய வேண்டும் என்கிற கண்டீஷனை போட்டுள்ளார்.
அக்ஷயாவுக்கு சில சமையல்கள் சமைக்க தெரியும் என்றாலும், கணவர் தனுஷுக்காக கஷ்டப்பட்டு விதவிதமாக சமையல் செய்ய கற்று கொண்டுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.