எதிர்பாராத எலிமினேஷன்; பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதா இதுவரை வாங்கிய சம்பவம் எவ்வளவு?

First Published | Nov 11, 2024, 11:53 AM IST

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யாரும் எதிர்பாராத போட்டியாளராக வெளியேறியுள்ள, சுனிதா இதுவரை வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
 

Vijay sethupathi Anchoring Bigg Boss 8

விஜய் டிவியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த, பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒவ்வொரு வருடமும் 100 நாட்களை மையமாக வைத்து நடத்தப்படும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி துவங்கிய நிலையில், 35 நாட்களை கடந்து... விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.
 

Vijay tv Bigg Boss Contestant

அதே போல் இந்த முறை ஆட்டம் மட்டும் புதுசு அல்ல, பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் ஆளும் புதுசு தான். கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பணிகள் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து, தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நிலையில், இதுவரை நடந்த எவிக்ஷனில் ரவீந்தர் சந்திரசேகரன், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடந்த வாரம் அன்ஷிகா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது.

மரியாதை குறைய கூடாது; அஜித் 40 வயதில் எடுத்த முடிவை... 70 வயதில் கனத்த இதயத்தோடு எடுத்த கமல்ஹாசன்!
 

Tap to resize

Bigg Boss Tamil season 8 Contestant

மேலும் புதிதாக 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றனர். பழைய போட்டியாளர்கள் தொடர்ந்து புதிய போட்டியார்களை டார்கெட் செய்து வரும் நிலையில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நேற்று நடந்தது. இதில், யாரும் எதிர்பாராத போட்டியாளரான... சுனிதா வெளியேறியுள்ளார். பிக்பாஸ் ரசிகர்கள் இந்த வாரம் பவித்ரா அல்லது சாச்சனா தான் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக கருதினர். ஆனால் சுனிதா நல்ல கன்டென்ட் கொடுத்து விளையாடிய போதும் அதிரடியாக ஓட்டுகள் குறைவாக பெற்று வெளியேறியுள்ளார்.
 

Sunita Salary

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு, இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, சுனிதா ஒரு நாளைக்கு ரூ.25,000 வாங்கிய நிலையில்... 35 நாட்களுக்கு சேர்த்து, 8 லட்சத்து 75 ஆயிரம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சுனிதா இதுவரை சின்னத்திரையில் மட்டுமே அதிகம் பிரபலமாக இருக்கும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னராவது வெள்ளித்திரை வாய்ப்பை கைப்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இயக்கிய 6 படங்களும் ஹிட்! 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் அட்லீயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!