சக்திமான் குறித்த அறிவிப்பை முகேஷ் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முகேஷ் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அவர் திரும்பும் நேரம் இது. முதல் சூப்பர் டீச்சர் – சூப்பர் ஹீரோ
இன்றைய குழந்தைகள் மீது இருளும் தீமையும் மேலோங்கி வருவதால் சக்திமான் திரும்பும் நேரம் இது…
ஒரு மெசேஜ் உடன் திரும்ப வருகிறார். இன்றைய தலைமுறைக்கு போதையுடன் வருகிறார். அவரை வரவேற்கிறோம். டீசரை பாருங்கள்… பீஷ்ம் இன்டர்நேஷனல் யூடியூப் சேனலில் மட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பங்களை மையப்படுத்தி இந்த தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகேஷ் கண்ணா வெளியிட்ட டீசர் வீடியோவில் சக்திமானாக வரும் முகேஷ் கண்ணா, சக்திமான் உடையில் பள்ளிக்குள் சுழன்றவாறே வருகிறார். பின்னர் ஒரு இடத்திலிருந்து எழுந்து சுதந்திர போராட்ட தியாகிகளான சந்திரசேகர் அசாத், பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை பார்த்து பாடல் பாடுகிறார். அதன் பிறகு விரைவில் வரும் என்று காட்டப்படுவதோடு டீசர் முடிவடைகிறது