திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற ரம்யா பாண்டியன் - அதுவும் எங்க தெரியுமா?

First Published | Nov 11, 2024, 1:03 PM IST

நடிகை ரம்யா பாண்டியன், லோவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அவரின் ஹனிமூன் போட்டோஸ் வெளியாகி உள்ளது.

Ramya Pandian, Lovel Dhawan

ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். அவர் நடத்திய மொட்டைமாடி போட்டோஷூட் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி அவருக்கு சின்னத்திரை மற்றும் சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியன், அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.

Ramya Pandian

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. அதிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்திய அவர் பைனல் வரை முன்னேறினார். இதன்பின்னர் சூர்யா தயாரிப்பில் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிற படத்தில் நடித்த ரம்யா பாண்டியன், அப்படத்துக்கு பின் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். கவர்ச்சி காட்டியும் பட வாய்ப்பு வராததால் ஆன்மீகத்தில் இறங்கிய அவர் யோகா பயிற்சிக்காக ரிஷிகேஷ் சென்றார்.

Tap to resize

Ramya Pandian Husband Lovel Dhawan

அப்போது அளித்த பேட்டி ஒன்றில் தான் காதல் திருமணம் தான் செய்துகொள்வேன் என கூறி இருந்தார் ரம்யா. அதன்படி ரிஷிகேஷில் யோகா பயிற்சிக்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்திற்கு சென்ற ரம்யா பாண்டியனுக்கும் அங்கு யோகா பயிற்சியாளராக இருக்கும் லோவல் தவானுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் யோகா பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரம்யா பாண்டியன் தன்னுடைய காதல் விவகாரத்தை சீக்ரெட் ஆகவே வைத்திருந்தார்.

இதையும் படியுங்கள்... கத்துக் கொடுத்த வாத்தியாரையே கரெக்ட் பண்ணிட்டாங்க! ரம்யா பாண்டியன் காதல் கதை தெரியுமா?

Ramya Pandian Marriage Photo

இதனிடையே கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி, ப்ரீ வெட்டிங் வீடியோவை வெளியிட்டு தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரம்யா பாண்டியன், கடந்த நவம்பர் 8-ந் தேதி லோவல் தவானை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ரிஷிகேஷின் கங்கை நதிக்கரையில் மேடை அமைக்கப்பட்டு இயற்கை எழில் சூழ உறவினர்கள் முன்னிலையில் ஜாம் ஜாம்னு நடைபெற்றது. ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆனது.

Ramya Pandian Honeymoon Photo

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கும் சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன். அங்கு தன் காதல் கணவர் லோவல் தவான் உடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு பின்னணியில் புது வெள்ளை மழை பாடலை ஒலிக்கவிட்டுள்ளார். லோவல் தவானை திருமணம் செய்துகொண்ட ரிஷிகேஷில் தான் தற்போது ஹனிமூனும் கொண்டாடி வருகிறார் ரம்யா பாண்டியன். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ஜாய் பண்ணுங்க என வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் - லோவல் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது!

Latest Videos

click me!