Bollywood star wives who earns more than their husbands
இந்திய திரையுலகில் பல நட்சத்திர தம்பதிகள் வெற்றிகரமான நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். ஹேம மாலினி – தர்மேந்திரா தொடங்கி, ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தொடங்கி பல நட்சத்திர ஜோடிகளை உதாரணமாக சொல்லலாம். பொதுவாக திரையுலகை பொறுத்தவரை நடிகைகளை விட நடிகர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் பாலிவுட்டில் சில நடிகைகள் தங்கள் கணவரை விட அதிகம் சம்பாதிக்கின்றனர். இந்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரின் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருமே பிசியான நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். இந்த நட்சத்திர தம்பதி இருவருமே ஒரு படத்திற்கு ரூ.10 – ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் விளம்பரங்கள் மூலம் அபிஷேக் பச்சனை விட ஐஸ்வர்யா ராய் அதிகம் சம்பாதிக்கிறார். அதே போல் சொத்து மதிப்பிலும் அபிஷேக்கை விட ஐஸ்வர்யா ராயிடமே அதிக சொத்து உள்ளது. அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பு ரூ.280 கோடியாகும். ஆனால் ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு ரூ.862 கோடியாகும்.
பிபாஷா பாசு :
நடிகை பிபாஷா பாசு ஒரு படத்திற்கு ரூ. கோடியும், ஸ்டேக் ஷோக்களுக்கு ரூ.2 கோடியும், விளம்பரங்களுக்கு ரூ.2.5 கோடியும் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவரின் கணவர் கரண் சிங் குரோவர் ஒரு படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார்.
சன்னி லியோன்
நடிகை சன்னி லியோன் ஒரு படத்திற்கு ரூ.2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.98 கோடியாகும். ஆனால் அவரின் கணவர் டேனியல் வெபரின் சொத்து மதிப்பு ரூ. 16.8 கோடியாகும்.
பாலிவுட் நடிகை ஃபரா கான் தனது கணவர் ஷிரிஷ் குண்டெரை விட அதிகம் சம்பாதிக்கிறார். ஷிரிஷின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஃபராவின் சொத்து மதிப்பு ரூ.75 கோடியாகும்.
பாலிவுட்டின் மற்றொரு நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர் கரீனா கபூர் – செயிஃப் அலிகான் ஜோடி. செயிஃபை விட கரீனா அதிகம் சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சொத்து மதிப்பை பொறுத்த வரை செயிஃப் அலிகான் அதிக சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார். செயிஃபின் சொத்து மதிப்பு ரூ.1200 கோடி என்று கூறப்படுகிறது. கரீனாவின் சொத்து மதிப்பு ரூ. 485 கோடியாகும்.
பாலிவுட்டின் பழம்பெரும் நட்சத்திர தம்பதிகளில் ஹேம மாலினி – தர்மேந்திரா தம்பதி முக்கியமானவர்கள். 76 வயதாகும் ஹேம மாலினி தனது கணவர் தர்மேந்திராவை விட அதிகம் சம்பாதிக்கிறார். தர்மேந்திராவுக்கு தற்போது அதிகளவில் நடிப்பதில்லை. ஆனால் ஹேம மாலினி விளம்பரங்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பாதிக்கிறார். இதுதவிர அவர் எம்.பியாக இருப்பதால் அதற்கும் தனி சம்பளம் கிடைக்கிறது.