தமிழ் சினிமாவில் இனி இப்படி ஒரு திரைப்படம் எடுக்கப்படாது என்று சொல்லும் அளவிற்கு பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டில் வெளியாகி பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், இப்போது இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் நடிகர் கமலஹாசனின் நடிப்பை வியந்து பாராட்டி மக்கள் கொண்டாடி வரும் திரைப்படம் தான் "ஆளவந்தான்". இந்த திரைப்படமும் தற்பொழுது OTT தளத்தில் வெளியான பிறகு தான் பெரிய அளவிலான வரவேற்புகளை பெற்று வருகிறது. நந்தகுமார் மற்றும் விஜயகுமார் என்று இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கமலஹாசன் அசத்தியிருப்பார். அது மட்டுமல்ல இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் சாதனைகளை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.