- Home
- Gallery
- 34 வயசு கவினுக்கு ஜோடி... 38 வயசு யஷ்ஷுக்கு நயன்தாரா அக்காவா? டென்ஷனான லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!
34 வயசு கவினுக்கு ஜோடி... 38 வயசு யஷ்ஷுக்கு நயன்தாரா அக்காவா? டென்ஷனான லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!
கோலிவுட் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா தன்னை விட 5 வயது குறைவான ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் போது ஒரே ஒரு வயது வித்தியாசம் உள்ள யஷ்ஷுக்கு அக்காவா? என கொந்தளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Nayanthara look like young:
நடிகை நயன்தாராவின் வயசு வருடத்திற்கு ஒருமுறை ஏறிக்கொண்டே சென்றாலும், இவருடைய இளமையானயும், அழகும் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டு தான் செல்கிறது. நடிகை நயன்தாரா பிறந்தநாளின் போது கூட, அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை ஒயினுடன் ஒப்பிட்டு போட்டிருந்த பதிவே இதற்கு சாட்சி.
Nayanthara Movies:
திருமணம், குழந்தைகள், என செட்டில் ஆகிவிட்டாலும்... நடிப்பின் மீது உள்ள ஆர்வம் நயன்தாராவை விடாமல் துரத்தி வருகிறது. எனவே வித்தியாசமான கதை அமைந்தால், கதையின் நாயகியாகவும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே வெற்றி பெறாவிட்டாலும், விமர்சன ரீதியிலான வரவேற்பை பெறுகின்றன.
51 வயதிலும் இப்படியா? தோழிகளுடன் 3 ரோஸஸாக மாறி ஆச்சரியப்படுத்திய அனிதா விஜயகுமாரின் போட்டோஸ்!
Nayanthara Play Sister Role:
அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் கடைசியாக 'அன்னபூரணி' திரைப்படம் வெளியான நிலையில், தற்போது மண்ணாங்கட்டி, டெஸ்ட் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். அதேபோல் நடிகை கீது மோகன் தாஸ் இயக்கத்தில், யஷ் நடித்துவரும் திரைப்படத்தில் ஹீரோ யஷ்ஷுக்கு அக்காவாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்ததாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகின.
Nayanthara Salary:
நயன்தாராவோ இந்தப் படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க சுமார் 20 கோடி சம்பளமாக கேட்டதாக கூறப்பட்டது. எனவே நயன்தாராவை இந்த படத்தில் இருந்து தூக்கி விட்டு, நடிகை தபுவை நடிக்க வைக்க படக்குழு முயன்றனர். ஆனால் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு மிகப்பெரிய பலம் என கருதி... அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து, இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
பாவாடை தாவணியில் 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியா!
nayanthara and kavin Movie
ஹீரோயினாக இருக்கும் நயன்தாராவை இப்படி அக்காவா நடிக்க வைத்துள்ளது தான் தற்போது ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. அதாவது நயன்தாராவுக்கு தற்போது 39 வயது ஆகும் நிலையில், இவரை விட சுமார் 5 வயது குறைவான கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆனால் ஒரே ஒரு வயது மட்டுமே யஷ் நயன்தாராவை விட குறைவானவர் என கூறி பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
Yash Movie:
டாக்சிக் படத்தில் யஷ்ஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். அதில் ஒருவர் ஷங்கர் இயக்கியுள்ள 'கேம் சேஞ்சர்' பட நாயகி கியாரா அத்வானி ஆவார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், இதில் சைலண்டாக நடித்து வருகிறாராம் நயன்தாரா.
Kavin
இதை தவிர தன்னை விட 5 வயது குறைவான நடிகர் கவினுக்கு ஜோடியாக.... விஷ்ணு எடவன் என்பவர் இயக்கம் படத்தில், கவினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நயன்தாரா வெளியிட, அது வைரலானது குறிப்பிடத்தக்கது.