அடிதடி, வெட்டு, குத்து என இன்றைய காலகட்டத்தில் ரிலீஸ் ஆகும் படங்களில் பெரும்பாலானவை வன்முறை நிறைந்ததாகவே உள்ளன. அவற்றிற்கு மத்தியில் அவ்வப்போது ஃபீல் குட் படங்களும் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு வெளிவந்த ஒரு ஃபீல் குட் படம் தான் 3BHK. இப்படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கி இருந்தார். இவர் இதற்கு முன்னர் 8 தோட்டாக்கள், குறுதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கியவர். 3BHK திரைப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், சித்தார்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருந்தனர். அவர்களுடன் மீதா ரகுநாத், தேவையானி, யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
24
பாசிடிவ் ரெஸ்பான்ஸ் பெறும் 3BHK
சொந்த வீடு கட்டும் கனவில் இருக்கும் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியின் கனவு நனவானதா? இல்லையா? என்பதை யதார்த்தத்திற்கு நெருக்கமாக கொடுத்துள்ள படம் தான் 3BHK. இப்படத்திற்கு அம்ரித் இசையமைத்து உள்ளார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரித்து உள்ளார். இப்படம் கடந்த ஜூலை 4ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அன்றைய தினம் இப்படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆன மற்ற படங்களை காட்டிலும் 3BHK படத்திற்கு தான் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் குவிந்த வண்ணம் உள்ளது.
34
3BHK படத்தின் வசூல்
அந்த வகையில் ரிலீஸ் ஆன முதல் நாளில் 3BHK திரைப்படம் இந்திய அளவில் ரூ.1.15 கோடி வசூலித்து இருந்தது. இதையடுத்து இரண்டாம் நாள் பிக் அப் ஆன அப்படம் கடந்த சனிக்கிழமை அன்று மட்டும் ரூ.1.9 கோடி வசூலித்தது. பின்னர் ஞாயிற்றுக் கிழமை படத்தின் வசூல் மேலும் அதிகரித்து, அன்றைய தினம் மட்டும் இந்திய அளவில் ரூ.2.15 கோடி வசூலித்து இருந்தது. இதன்மூலம் ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸீல் ரூ.5.17 கோடி வசூலித்த இப்படம் நான்காம் நாள் சற்று சரிவை சந்தித்து இருக்கிறது. வார நாள் என்பதால் ஞாயிற்றுக் கிழமையை காட்டிலும் திங்களன்று பாதி கூட வசூலிக்கவில்லை.
அதன்படி 3BHK திரைப்படம் நேற்று வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே வசூலித்து இருக்கிறது. இதன்மூலம் நான்கு நாட்களில் 3BHK திரைப்படம் ரூ.5.70 கோடி வசூலித்துள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை வரை இப்படத்தின் வசூல் டல் அடிக்கும் என கூறப்படுகிறது. அதன்பின்னர் இந்த வார இறுதியில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாரமும் சில புதுப்படங்கள் ரிலீஸ் ஆவதால், 3BHK படத்திற்கு தியேட்டர்களும் குறைய வாய்ப்புள்ளது. இப்படம் கம்மியான பட்ஜெட்டில் உருவானது என்பதால் இந்த வாரத்தில் லாபக் கணக்கை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.