மும்பை விமான நிலையத்தில், ஸ்ருதி ஹாசன் காதலர் ஷாந்தனுவை கட்டி பிடித்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கருப்பு நிற மாடர்ன் உடையில், ஸ்ருதி ஹாசன் விமான நிலையத்திற்கு வருகிறார். அதிலும் அவர் அணிந்திருக்கும் டெனிம் ஓவர் கோட் தோளில் இருந்து கழண்டு விழுவதை கூட கண்டுகொள்ளாமல் நடந்து வரும் ஸ்ருதி, பின்னர் தன்னுடைய காதலரை சந்திக்கிறார்.
ஸ்ருதி ஹாசனின் காதலர் சாந்தனு ஹசாரிகா, ஒரு டூடுல் கலைஞர் ஆவர். இவர்கள் இருவரும் கொரோனா லாக்டவுனில் இருந்து காதலிக்க துவங்கினர். தற்போது வரை திருமணம் குறித்து இருவருமே வாய் திறக்காத நிலையில், லிவிங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து, நானி-யின் 30-ஆவது படத்திலும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இந்த படத்தில் மிருணாள் தாகூர், நானிக்கு ஜோடி என கூறப்பட்டாலும், ஸ்ருதி இரண்டாவது நாயகி அல்லது, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.