தெலுங்கு திரையுலகில் முன்னாடி நடிகராக இருக்கும் ராம் சரணுக்கு, RRR படத்தின் வெற்றி உலக அளவில் ரசிகர்களை பெற்றுத்தந்தது. இவருக்கும், உபாசனாவிற்கும் திருமணம் ஆகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உபாசனா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்தார் ராம் சரண். மேலும் உபாசனாவின் வளையக்காப்பு புகைப்படங்கள் முதல்கொண்டு சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
மேலும் ரசிகர்களுடனும் இந்த சந்தோஷத்தை பரிமாறி கொண்டனர். ராம் சரண் ஷூட்டிங் பணிகளை ஓரம் கட்டி வைத்துவிட்டு, தன்னுடைய மகளை கவனித்து வருவதாகவும் தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியானது.
அதன்படி சற்று முன்னர், ராம்சரண் - உபாசனா ஜோடி, தங்களின் குழந்தையின் தொட்டில் போடும் விழாவை நிறைவு செய்த பின்னர், குழந்தைக்கு க்ளின் காரா கோனிடேலா என வித்தியாசமாக, வைத்துள்ள பெயரை அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ராம் சரணுக்கும் அவரின் மனைவிக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.