கேரளாவை சேர்ந்த சுவர்ணா, 1992 ஆம் ஆண்டிற்கான மிஸ் கேரளா என்கிற பட்டத்தை தட்டி சென்றவர். அழகி பட்டத்தை இவர் பெற்ற பின்னர், சில மலையாள பட வாய்ப்புகள் இவரை தேடி வர துவங்கியது.
தமிழில் இவர் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம், சந்திரமுகி, திருப்பதி, ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத இடம்பிடித்த படங்கள் ஆகும்.
திரைப்படங்கள் மட்டும் இன்றி, 10க்கும் மேற்பட்ட மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல் தமிழில், 'தேன்மொழியால்', 'மாயா மச்சீந்திரா', 'சதுரங்கம்' போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த போது பளபளக்கும் அழகில், அழகு பதுமை போல் இருந்த... சொர்ணா தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருக்கும் சொர்ணா மீண்டும் நடிக்க வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.