Dhivya dharshini : சட்டையில் பல அர்த்தம் சொல்லும் விஜய் டிவி டிடி...க்யூட் போட்டோஸ் இதோ

First Published | Oct 18, 2022, 7:19 PM IST

இவர் சட்டை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. தற்போது இவை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Dhivyadharshini

விஜய் டிவி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கு. முன்பெல்லாம் விஜய் டிவியில் எந்த ஷோவாக இருந்தாலும் அதற்கு டிடி தான் தொகுப்பாளனி.

காபி வித் டிடி என இவர் பெயரிலேயே ஷோக்களும் நடத்தப்பட்டது. பிரபலங்கள் பலரையும் இவர் நேர்காணல் கண்டுள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.

Dhivyadharshini

சமீப காலமாக திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்து வருகிறார் திவ்யதர்ஷினி. முன்னதாக கமலஹாசனின் நளதமயந்தி என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தார். பின்னர் செல்வி மற்றும் அரசி ஆகிய சீரியல்களில் நடத்தார்.

இதன் பின்னரே 2007 முதல் விஜய் டிவிகள் தொகுப்பாளராக மாறினார் திவ்யதர்ஷினி. 2014 ஆம் ஆண்டு தான் இவர் சொந்த நிகழ்ச்சியான காபி வித் டிடி என்கிற நிகழ்ச்சி துவங்கியது. இதன் மூலம் தான் இவர் மிகப் பிரபலமடைந்தார். 

Tap to resize

Dhivyadharshini

இதற்கிடையே நீண்டநாள் நண்பரும் உதவி இயக்குனருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் மூன்று ஆண்டுக்கு மட்டுமே அவருடன் வாழ்ந்தார். 2017 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு... Diwali 2022 TV Special Movies : தீபாவளிக்கு டிவியில் என்ன படம்?...இதோ சின்னத்திரை மூவி லிஸ்ட்

Dhivyadharshini

பின்னர் நாயகிகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து வருகிறார். இதற்கிடையே முடக்கு வாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த திவ்யதர்ஷினி கண்ட ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாக்கினர். தற்போது சிகிச்சைக்குப் பிறகு பழைய நிலைக்கு திரும்பி உள்ள திவ்யதர்ஷினி முன்பை விட அதிக கவர்ச்சி காட்டி வருகிறார்.

Dhivyadharshini

தற்போது திவ்யதர்ஷினி காபி வித் காதல், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இவர் சட்டையில் கொடுத்துள்ள படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு சட்டைக்கும் ஒவ்வொரு அர்த்தமென கொண்டாடி வருகின்றனர் டிடியின் ரசிகர்கள்.

மேலும் செய்திகளுக்கு... ஒருவழியாக முடிவுக்கு வந்த வாடகைத்தாய் சர்ச்சை..கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்டார் சின்மயீ

Latest Videos

click me!