தீபாவளி என்றாலே மகிழ்ச்சி பொங்குவதுடன் தொலைக்காட்சிகளில் புது புது படங்களை பார்க்கலாம் என்கிற உற்சாகமும் மக்களிடையே நிலவுவது வழக்கம். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு சன் டிவியில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ஒளிபரப்பாக உள்ளது. ஒவ்வொரு தீபாவளிக்கும் விஜய் திரைப்படங்கள் ஒளிபரப்பாவது வழக்கம் தான். பிகில், தெறி, ஜில்லா என அனைத்து திரைப்படங்களும் தீபாவளி அன்றுதான் ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் தற்போது சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் ஒளிபரப்பாகிறது. தீபாவளி அன்று மாலை 6.30க்கு இந்த படம் போடப்படும் என சன் டிவி அறிவித்துள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகியிருந்தது. ஆனால் கலவையான விமர்சனங்களையே படம் பெற்றிருந்தது.