viduthalai shooting spoot
சூரிய நாயகனாக அறிமுகமாகும் விடுதலை படம் பல ஆண்டுகளாக படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கிய இந்த படம் இன்றும் இறுதிக்கட்டத்தை நெருங்க வில்லை என்றே தோன்றுகிறது. திண்டுக்கல் சிறுமலை, சென்னை, கோடைக்கான என படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய ரோலில் நடிக்கும் விடுதலையை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.
viduthalai shooting spoot
நாவல் தழுவலான இந்த படத்தின் மூலம் சூரி நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் துவங்கியதிலிருந்து பலமுறை இடைவெளி விடப்பட்டது. கால்ஷீட் பிரச்சனை தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ரைடு உள்ளிட்ட பல காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போனது. சமீபத்தில் கொடைக்கானலில் சூட்டிங் நடத்துவதற்காக சென்ற டீம் அங்கிருந்த சிறுமலைக்கு புறப்பட்டனர். ஆனால் அங்கும் இதன் இறுதி கட்டப் படபிடிப்பு எடுக்கப்படவில்லை தற்போது சென்னை திரும்பி உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...இவ்வளவு நடந்தும் கோபியின் மனைவி என கூறும் பாக்கியா!!அதிர்ந்துபோன ராதிகா
viduthalai
இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட பட்ஜெட்டை வீட்டா பல மடங்கு பணம் செலவாகி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெற்றிமாறனின் படங்கள் பல ஆண்டுகள் படமாக்கப்படுவதால் தயாரிப்பாளர்கள் நொந்து போய் உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது விடுதலை படத்திற்கும் இந்த நிலை ஏற்பட்டிருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.