
தமிழர்களின் பாரம்பரியமான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த ஆண்டு வருகிற அக்டோபர் 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புதிதாக திருமணமான ஜோடிகளுக்கு இந்த தீபாவளி ரொம்ப ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில் இதுதான் அவர்களுக்கு தலை தீபாவளி. அப்படி இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாட உள்ள கோலிவுட்டின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் டபுள் சந்தோஷத்தோடு தலை தீபாவளியை கொண்டாடப்போகிறார்கள். ஏனெனில் இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அதனால் இந்த தீபாவளி விக்கி - நயன் ஜோடிக்கு ஸ்பெஷலான ஒன்றாக உள்ளது.
ரவீந்தர் - மகாலட்சுமி
நயன் - விக்கி ஜோடி திருமணத்தை அடுத்து அதிகம் பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் என்றால் அது ரவீந்தர் - மகாலட்சுமியின் திருமணம் தான். இவர்கள் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். தலை தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக ஹனிமூன் கூட செல்லாமல் ஆவலோடு காத்திருக்கிறது இந்த ஜோடி.
புகழ் - பென்ஸி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன புகழ், கடந்த மாதம் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸியை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து பிரபலங்கள் சூழ பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தி முடித்த இந்த ஜோடி தற்போது அதே குஷியுடன் தலை தீபாவளி கொண்டாட தயாராகி வருகிறது.
ஆதி - நிக்கி கல்ராணி
கோலிவுட்டில் இந்த வருடம் காதல் திருமணம் செய்துகொண்ட மற்றுமொரு நட்சத்திர ஜோடி ஆதியும், நிக்கி கல்ராணியும் தான். கடந்த ஜூன் மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் பாரிஸிற்கு ஹனிமூன் சென்றுவந்த இந்த ஜோடி, தற்போது தலை தீபாவளியை கொண்டாட தயாராகி வருகிறது.
சித்து - ஸ்ரேயா
திருமணம் என்கிற சீரியலில் ரீல் ஜோடியாக நடித்தபோது காதலித்து பின்னர் ரியல் ஜோடி ஆனவர்கள் தான் சித்துவும், ஸ்ரேயாவும். தற்போது சித்து ராஜா ராணி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். சித்துவுக்கும் ஸ்ரேயாவுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி திருமணம் நடைபெற்றது. சுமார் ஒராண்டுக்கு பின் தற்போது தான் அவர்கள் தலை தீபாவளியை கொண்டாட இருக்கிறார்கள்.
மதன் - ரேஷ்மா
சீரியலில் நடித்தபோது காதலித்த மதனும் ரேஷ்மாவும் கடந்த் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். தற்போது இந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளது. இவர்களும் இந்த ஆண்டுதான் தலை தீபாவளி கொண்டாட உள்ளார்கள்.
ஆர்யன் - ஷபாபா
பாக்யலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனும், செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் இந்த ஆண்டு தான் தங்களது தலை தீபாவளியை கொண்டாட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...உலக அளவில் அதிகம் தேடப்பட்ட தலைப்பு இந்த முன்னணி நடிகரின் படத்தின் பெயர் தான்? வெளியான ஆச்சர்ய தகவல்!
ஜஸ்டின் பிரபாகர்
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ள ஜஸ்டின் பிரபாகரும் தலை தீபாவளி கொண்டாட உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இவருக்கு திருமணம் நடந்தது.
பிகில் நடிகை காயத்ரி
பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து அசத்திய நடிகை காயத்ரியும் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாட இருக்கிறார். இவருக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது.
பரிதாபங்கள் கோபி - சுதாகர்
பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனல் மூலம் பல்வேறு ஸ்பூப் வீடியோக்களை செய்து மக்கள் மத்தியில் பிரபலமான கோபியும், அவரது நண்பர் சுதாகரும் இந்த ஆண்டு தான் தலை தீபாவளியை கொண்டாட உள்ளனர். இதில் சுதாகருக்கு கடந்த மார்ச் மாதமும், கோபிக்கு கடந்த மாதமும் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அஜய் கிருஷ்ணா - ஜெர்சி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களும் இந்த வருடம் தான் தலை தீபாவளியை கொண்டாட இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்... bigg boss tamil 6 : பிக்பாஸ் சீசன் 6-ல் ஒரே வாரத்தில் மக்கள் மனதை வென்ற டாப் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ