தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா நாயகியாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். கிட்டத்தட்ட 260க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார்.
பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல பாராட்டுகளை பெற்றுள்ள இவர் படையப்பாவில் நீலாம்பரியாக வந்து தமிழ் ரசிகர்களின் கண்களில் இன்று வரை நீங்காத இடம் பிடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
தமிழில் அம்மன் படங்கள் என்றால் அது ரம்யா கிருஷ்ணனின் படங்கள் தான் என்று ஆகிவிட்டது. அம்மன், நாகேஸ்வரி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, அன்னை காளிகாம்பாள் என அம்மனை நம் கண் முன் நிறுத்தி இருந்தவர் ரம்யா கிருஷ்ணன்.
தனது விழிகளால் மிரட்டி ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் திறமை கொண்ட இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் இவர் ஜொலித்துள்ளார்.
Ramya Krishnan
இவர் இறுதியாக லிகர் படத்தில் நாயகனின் தாயாக தோன்றி மாஸ் டயலாக் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருந்தார். இந்த படம் தமிழ் உள்ளிட்ட பழமொழிகளில் வெளியாகி இருந்தது.
Ramya Krishnan
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் தோன்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Ramya Krishnan
இதற்கிடையே 53 வயதாகும் ரம்யா கிருஷ்ணன். தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ப்ரோமோஷன் விழாக்களில் இவரை கண்ட ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். தற்போது நியூ போட்டோ ஷூட்டையும் இவர் நடத்தியுள்ளார்.