சினிமாவிலும் சரி வாழ்க்கையிலும் சரி கணவருக்கு பக்கபலமாக இருந்து வருபவர் ஜோதிகா. இவர்கள் தயாரிப்பு நிறுவனமான 2d மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளனர். அதன்படி சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதை சமீபத்தில் தான் பெற்றிருந்தனர் சூர்யாவும் ஜோதிகாவும்.
அறிமுகத்தின் போதே ஒரு வருடத்திற்கு ஆறு படங்கள் கொடுத்து அசத்தியிருந்தார் ஜோதிகா. இதையடுத்து டும் டும் டும், ஸ்டார், பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களிலும் தோன்றியிருந்தார். கொழுக் மொழுக் என இருந்தாலும் இவரை ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்தார்கள்.
பிரபல நடிகையாக இருந்த நக்மாவின் தங்கையான இவர் தனக்கு என தனி ஒரு கேலரியை உருவாக்கினார். ஃபேன்ஸ்பேஸும் அதிகமாகவே இருந்தது. தமிழில் பல ஹிட் படங்களில் நடித்த ஜோதிகா, இறுதியாக 2009 ஆம் ஆண்டு சீதா கல்யாண படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையே பூவெல்லாம் கேட்டுப்பாரிலிருந்து காக்க காக்க வரை கிட்டத்தட்ட ஏழு படங்களை தனது கணவர் சூர்யாவுடன் நடித்து முடித்து இருந்தார் ஜோதிகா. இதை அடுத்து இவர்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
ரசிகர்களை வசீகரித்த அழகு கண்கள்
நாயகியாக நடித்து வந்த இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக் பாட் , தம்பி, பொன்மகள் வந்தால், உடன்பிறப்பு என சக்க போடு போட்டு வருகிறார் ஜோதிகா.
சினிமா துறையில் இருந்து ஒதுங்கிய நேரத்தில் வெளியூருக்கு சென்று சைக்காலஜி தொடர்பான பட்டப் படிப்பையும் முடித்த இவர், தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக மும்பையில் செட்டிலாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் 2டி நிறுவனம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது. முதல் படமாக சூரரைப் போற்று ரீமேக் தயாரித்து வருகிறது 2டி.
தயாரிப்பு நிறுவனத்தில் முழு கவனம் செலுத்துவதற்காக இந்த தம்பதிகள் தங்களது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாக உள்ளனர். முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த ஜோதிகா சூர்யாவிற்காக மதம் மாறி இருந்தார். இவருக்கு இன்று பிறந்தநாள் கடந்த 1978 ஆம் ஆண்டு பிறந்த ஜோதிகாவிற்கு இன்றுடன் 44 வயதாகிறது. இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறிய வருகின்றனர்.