விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ‘நோ’ சொன்ன ராஷ்மிகா... மாஸ்டர் நடிகையை மாஸாக களமிறக்கிய பா.இரஞ்சித்

Published : Oct 18, 2022, 10:09 AM IST

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சியான் 61 படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ‘நோ’ சொன்ன ராஷ்மிகா... மாஸ்டர் நடிகையை மாஸாக களமிறக்கிய பா.இரஞ்சித்

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்துள்ளது. இப்படத்தில் அவர் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்தி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன. இதையடுத்து பா.இரஞ்சித் இயக்கும் சியான் 61 படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் விக்ரம். கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

24

சியான் 61 படத்தின் ஷூட்டிங் ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கே.ஜி.எஃப் பாணியில் உருவாக உள்ள இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க முதலில் வாரிசு பட நடிகை ராஷ்மிகாவை தான் அணுகியது படக்குழு. ஆனால் அவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாது என சொல்லிவிட்டாராம்.

இதையும் படியுங்கள்... விஜே சித்ரா மரண வழக்கில் ‘அந்த’ விஜய் டிவி பிரபலத்துக்கு தொடர்பு இருக்கு... புது குண்டை தூக்கிப்போட்ட ஹேமந்த்

34

இதையடுத்து விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனனை ஹீரோயினாக கமிட் செய்துள்ளதாம் படக்குழு. இவர் ஏற்கனவே தமிழில் மாஸ்டர், பேட்ட, மாறன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூலம் முதன்முறையாக விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் மாளவிகா.

44

சியான் 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை கடப்பாவில் நடத்தி வரும் படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை ராமேஸ்வரத்தில் நடத்த உள்ளனர். இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாக்கி வருகின்றனர். இதுதவிர இதர மொழிகளில் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஷாக்கிங் நியூஸ்... சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ள அஜித்..! எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு விஷயம் தானாம்

Read more Photos on
click me!

Recommended Stories