விஜே சித்ரா மரண வழக்கில் ‘அந்த’ விஜய் டிவி பிரபலத்துக்கு தொடர்பு இருக்கு... புது குண்டை தூக்கிப்போட்ட ஹேமந்த்

Published : Oct 18, 2022, 09:11 AM IST

விஜே சித்ரா மரண வழக்கில் விஜய் டிவி பிரபலத்துக்கும், ஓட்டல் ஓனர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக ஹேமந்த் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
15
விஜே சித்ரா மரண வழக்கில் ‘அந்த’ விஜய் டிவி பிரபலத்துக்கு தொடர்பு இருக்கு... புது குண்டை தூக்கிப்போட்ட ஹேமந்த்

சின்னத்திரை சீரியல்களில் நடித்து, சினிமா ஹீரோயின்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் விஜே சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரின் இந்த தற்கொலை முடிவு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

25
தொகுப்பாளர் ரக்‌ஷன்

சித்ராவின் தற்கொலை அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என சித்ராவின் பெற்றோரும், உறவினர்களும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வந்தனர். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் ஓராண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார். இதையடுத்து ஜாமின் பெற்ற இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியே வந்தார்.

35
குறிஞ்சி செல்வன்

கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் குறித்து பேசாமல் இருந்து வந்த ஹேமந்த், தற்போது மீண்டும் பேட்டிகளைக் கொடுக்கத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்கிற பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார். 

இதையும் படியுங்கள்... ஷாக்கிங் நியூஸ்... சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ள அஜித்..! எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு விஷயம் தானாம்

45
ரோஹித்

அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கும், அண்ணாநகரில் மெஸ் நடத்தி வரும் குறிஞ்சி செல்வனுக்கும் தொடர்பு இருப்பதாக ஹேமந்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இருவரும் சித்ராவுக்கு பல வகைகளில் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ள ஹேமந்த், இதற்கான ஆதாரங்கள் எல்லாம் சித்ராவின் ஆண் நண்பரான ரோஹித்திடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

55

தான் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்து தன்னிடம் ரோஹித் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துகொண்டதாகவும், சித்ராவின் மரணத்தில் ரக்‌ஷனுக்கும் குறிஞ்சி செல்வனை தவிர வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதும் ரோஹித்திற்கு தெரியும் என கூறிய ஹேமந்த், சித்ராவிற்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா அல்லது பணத்தொல்லை கொடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை. 

இதையும் படியுங்கள்... அடக்கொடுமையே... ‘வாரிசு’ படத்திற்காக விஜய் பாடிய பாடல் வீடியோவுடன் லீக் ஆனது - படக்குழு அதிர்ச்சி

click me!

Recommended Stories