நெருங்கி பழகினோம்.. அடிச்சு டார்ச்சர் செய்தான் - அர்னவ் மீது திருநங்கை கொடுத்த அடுக்கடுக்கான புகாரால் பரபரப்பு

First Published | Oct 17, 2022, 7:39 AM IST

திவ்யா அளித்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அர்னவ் மீது தற்போது திருநங்கை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அர்னவ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரகசியமாக திருமண செய்துகொண்ட இந்த ஜோடி, கடந்த மாதம் தான் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதோடு தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் திவ்யா.

இந்த அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில், அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவர் எட்டி உதைத்ததில் தனது வயிற்றில் இருக்கும் கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் இருந்தபடி நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து திவ்யாவின் குற்றச்சாட்டு அர்னவ் மறுப்பு தெரிவித்தார்.

பின்னர் இருவரும் மாறி மாறி ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு வந்தனர். இதையடுத்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் அர்னவ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போரூர் போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த அர்னவ்வை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்... bigg boss tamil : பிக் பாஸ் 6 இருக்கட்டும்..முந்தைய வின்னர்ஸ் இப்ப என்ன பன்றாங்க தெரியுமா?

Tap to resize

இதையடுத்து அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு வருகிற அக்டோபர் 28-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, தற்போது அர்னவ் மீது மலேசியாவை சேர்ந்த திருநங்கை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து திவ்யாவின் வழக்கறிஞரிடம் பேசியுள்ள அவர், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தானும் அர்னவ்வும் நெருங்கி பழகி வந்ததாகவும், அப்போது எங்களிடையே சண்டை வந்தபோது அங்குள்ள மால் ஒன்றில் வைத்து அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த சமயத்தில் அர்னவ் வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பில் இருந்ததாக அந்த திருநங்கை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... vijay : அரசியலுக்கு வரும் விஜய்?..துணை முதல்வரை கன்பார்ம் செய்த ரசிகர்கள் ...

Latest Videos

click me!