Published : Oct 14, 2022, 02:03 PM ISTUpdated : Oct 14, 2022, 07:54 PM IST
5 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு வீட்டிலேயே எளிய முறையில் வளைகாப்பு நடைபெற்று உள்ளது. பாண்டவர் இல்லத்திலும் இவர் கர்ப்பமாக இருப்பதாக காட்டப்படுகிறது.
சன் டிவியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டவர் இல்லம். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் குடும்ப செண்டிமெண்ட் நகைச்சுவை நாடகமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சண்முகம், பாப்ரிகோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ், குகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தம்பிகள் இணைந்து வாழும் கூட்டுக் குடும்ப கதையை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
26
serial actress anu pandavar illam
திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பாண்டவர்கள் ஐவரை திருமணம் செய்து கொள்ளும் மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மகிழ்ச்சிகள் குறித்து சுவாரசிய நிகழ்வுகளை இந்த தொடர் எடுத்து காட்டி வருகிறது. இதற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் அனு.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் மெல்ல திறந்தது கதவு என்று தொடரில் நடித்திருந்தார்.
46
serial actress anu pandavar illam
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய ரோலில் வந்திருந்தார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் இவர் பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் என்கிற வெற்றியை இவர் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமண புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் வைரலானது. இந்நிலையில் அணுவில் வளைகாப்பு போட்டோஸ் வெளியாகியுள்ளது.
66
serial actress anu pandavar illam
5 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு வீட்டிலேயே எளிய முறையில் வளைகாப்பு நடைபெற்று உள்ளது. பாண்டவர் இல்லத்திலும் இவர் கர்ப்பமாக இருப்பதாக காட்டப்படுகிறது.