ஆஜராகாமல் சூட்டிங்கிற்கு சென்ற அர்னவ்..அலேக்காக அள்ளிய போலீஸ்

First Published | Oct 14, 2022, 5:49 PM IST

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா  சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல திவ்யா ஸ்ரீதர்  சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி வருகிறார்.

Divya Shridhar love jihad

சீரியல் பிரபலங்கள் சமீபகாலமாக திருமணம் செய்து கொள்வது சகஜமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னவ் இருவரும் தங்களது திருமணம் குறித்து சமீபத்தில் தான் அறிவித்திருந்தனர். கேளடி கண்மணி சீரியல் மூலம் அறிமுகமான இந்த ஜோடி முன்னதாகவே திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவியிருந்தது. ஆனால் இந்த ஜோடி அதை முற்றிலும் மறுத்தது.

Divya Shridhar love jihad

இந்நிலையில் திடீரென  வீடியோவை வெளியிட்டு இருந்த திவ்யா ஸ்ரீதர் தனக்கும் அருனவிற்கும் முஸ்லிம் முறைப்படி திருமணம் முடிந்து விட்டதாகவும், தங்களது குழந்தை விரைவில் பிறக்க உள்ளதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர்.

மேலும் செய்திகளுக்கு....இன்று வெளியாகும் சர்தார் ட்ரைலர்...கார்த்தியின் மாஸ் லுக்கில் வெளியான போஸ்டர்

Tap to resize

Divya Shridhar love jihad

இதையடுத்து சமீபத்தில் திவ்யா ஸ்ரீதர் தன்னை அர்னவ் தாக்கியதாகவும், இதனால் கருக்கலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கொடுத்திருந்தார். ஆனால் இந்த புகார் முழுவதையும் அர்னவ் மறுத்ததுடன் வேறு ஒரு நடிகருடன் சேர்ந்து கொண்டு தன் குழந்தையை அளிக்க பார்ப்பதாகவும் திவ்யா ஸ்ரீதர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

Divya Shridhar love jihad

திவ்யா ஸ்ரீதர் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அர்னவ்  மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து சம்மனும் அனுப்பியுள்ளனர். ஆனால் போலீஸிடம் ஆஜராகாமல் அர்னவ் தலைமுறவாகிவிட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் நெகமத்தில் சூட்டிங் இருந்த அருனவை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா  சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல திவ்யா ஸ்ரீதர்  சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு....வலையை உடையாக அணிந்து பிளாக் அண்ட் ஒயிட் கவர்ச்சி பரப்பும் ரைசா வில்சன்

Latest Videos

click me!