தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது துணிவு படம் தயாராகி உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். துணிவு பட ஷூட்டிங் முடிந்து பின்னணி வேலைகள் படு ஜோராக நடக்கிறது. இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
துணிவு படத்துக்கு பின் நடிகர் அஜித், ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
அதுமட்டுமின்றி நடிகர் அஜித்திற்கு பைக்கில் உலக முழுவதும் சுற்றி வர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அதற்கான பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது அதற்கான பணிகளில் அவர் முழுவீச்சில் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஏகே 62 படத்தில் நடித்து முடித்த பின்னர் உலக சுற்றுலாவை தொடங்க உள்ளாராம் அஜித்.
இந்த உலக சுற்றுலாவை மேற்கொள்ளவதற்காக அவர் சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்துள்ளாராம். அதன்படி மொத்தம் 62 நாடுகளை அவர் பைக்கில் சுற்றிமுடிக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்பதால், இந்த காலகட்டத்தில் எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவுக்கு ரெஸ்ட் விட்டு தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இருக்கிறாராம் அஜித். இதன்மூலம் தனது பல நாள் கனவு நனவாகப் போகிறது என அஜித் ஹாப்பியாக இருந்தாலும், மறுபுறம் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு ஷாக்கிங் நியூஸ் ஆக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குனர் விக்ரமனின் மகன்..! துவங்கியது படப்பிடிப்பு..!